ஒரே வீட்டில் இத்தனை வாக்காளர்களா?? நீலகிரி மாவட்டத்தில் எழுந்த புகார்!!
நீலகிரி மாவட்டத்தில் குன்னூர் சட்டப்பேரவை தொகுதியில் அமைந்திருக்கும் கோடேரி என்ற கிராம பகுதியில் பாகம் 210-ல் உள்ள இறுதி வாக்காளர் பட்டியல் 12வது வார்டு உறுப்பினர் மனோகரன் ஆய்வு செய்தார். இந்த ஆய்வில் சில குறைபாடுகள் இருப்பது கண்டறியப்பட்டது.
அதன்படி குறிப்பிட்ட ஒரு சில வாக்குச்சாவடிகளுக்கு உட்பட்ட 12, 17-ம் வார்டுகள் மட்டுமே இருக்கும் நிலையில் 11, 12, 17 போன்ற வார்டுகளும் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் 9 மற்றும் 10 வார்டுகளில் வாக்காளர்களும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் வீட்டு எண் 10-ல் 9 பேர், 9-ல் 14 பேர், 11-ல் 79 பேர், 12-ல் 33 இருப்பதாக கணக்கு காட்டப்பட்டுள்ளது.
அந்த இடத்தை விட்டு காலி செய்து சென்று பல வருடங்கள் ஆகியும் அவர்களுடைய பெயர் இங்கேயே அமைந்திருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்து மனோகர் கூறுகையில், வாக்காளர் பட்டியலை இந்த நிலைமையில் வைத்துக் கொண்டு அரசியல் கட்சியில் இருப்பவர்கள் குறை கூறுவது மிகவும் வேடிக்கையான ஒன்றாக உள்ளது.
வாக்காளர் பட்டியலை சரியாக பராமரிக்காமல் குளறுபடியாக வைத்திருப்பதற்கு யார் காரணம் என்பதை ஆய்வு செய்யது அதனை சரி செய்ய வேண்டும்.
இது குறித்து தலைமை தேர்தல் அதிகாரிக்கு மனு அனுப்பப்பட்டுள்ளது என்றார். இதனைத் தொடர்ந்து அதிகாரிகள் அந்த கிராமத்தில் ஆய்வு செய்து வட்டாட்சியர் ஜவகர் கூறுகையில், வாக்காளர் பட்டியல் குறித்து ஆய்வு செய்ததில் அதில் இருக்கும் குழப்பங்கள் சரி செய்யப்படும் என்றும், Form 8ல் விண்ணப்பித்து சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறினார்.