சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு வற்புறுத்திய ஏட்டு!! புகார் அடிப்படையில் நடந்த விசாரணை!!
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அமைந்திருக்கும் கல்வராயன் மலைப்பகுதிக்கு உட்பட்ட கரியாலூர் காவல் நிலையத்தில் செயல்பட்டு வரும் பெட்டிக்கடை ஒன்றில் தமிழக அரசால் தடை செய்யப்பட்டிருக்கும் புகையிலை விற்பனை செய்து வருவதாக புகார் எழுந்தது.
அதன் அடிப்படையில் அந்த கடையின் உரிமையாளரை கரியாலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இந்நிலையில் அந்த காவல் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வரும் பிரபு என்பவர் கடையின் உரிமையாளரின் 17 வயதுடைய மகளை சந்தித்து அந்தப் பெண்ணிடம் உன் அப்பாவை ரிலீஸ் செய்ய வேண்டும் என்றால் நீ என்னுடன் அட்ஜஸ்ட் பண்ணனும் என்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இதைப் பற்றி அறிந்து கொண்ட அந்தப் பெண்ணின் தாயார் கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிப்பதை தொடர்ந்து எஸ்பி மாதவன், மகளிர் காவல் நிலையத்தில் ஆய்வாளரான விஷ்ணு பிரியா உள்ளிட்டவர்கள் பிரபுவிடம் கச்சிராபாளையம் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணையில் ஏட்டு அந்த பெண்ணிடம் கூறியது உறுதியானதை தொடர்ந்து போகோ மற்றும் வன்கொடுமை உள்ளிட்ட மூன்று பிரிவுகளில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி கடலூர் சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் பிரபுவின் அறையை சோதனையிட்ட பொழுது அங்கிருந்து நாட்டு துப்பாக்கி, சாராயம், கஞ்சா மற்றும் ஆணுறைகளை கைப்பற்றி கரியாலூர் போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். இது தற்பொழுது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.