ஜிஎஸ்டி சீர்திருத்தத்தினால் பொருளாதாரத்தில் கண்டிப்பாக இது நடக்கும்!! நிர்மலா சீதாராமன் பேச்சு!!
சமீபத்தில் அடுத்த தலைமுறை ஜிஎஸ்டி பற்றிய சீர்திருத்தங்களுக்கு கலந்துரையாடல் டெல்லியில் நடைபெற்றது. இந்த கலந்துரையாடலில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டார்.
அப்போது அவர் ஜிஎஸ்டி வரி சீர்திருத்தத்திற்கு பிறகு வரி குறைப்பு மூலம் கிடைக்கக்கூடிய பயன்களை வரும் 22ஆம் தேதிக்கு பிறகு வாடிக்கையாளர்கள் பயன்படுத்திக் கொள்ள பல நிறுவனங்கள் தங்களுடைய விருப்பத்தை தெரிவித்து வருகின்றனர்.
இதனால் பல நடுத்தர குடும்பத்தில் இருக்கும் மக்களுக்கும் வரி நிவாரணம் அளிப்பது, அவர்கள் தங்களுடைய ஆசைகளை நிறைவேற்றிக் கொள்வது என்றும், நடுத்தர, சிறு மற்றும் குரு நிறுவனங்கள் வைத்திருப்பவர்களுக்கு உதவுவதற்காகவும் வேலை வாய்ப்பை அதிக அளவில் உருவாக்குவதற்காகவும் அதிக அளவில் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.
ஏற்கனவே ஜிஎஸ்டி வரி கடந்த 2017 மற்றும் 2018 ஆம் ஆண்டில் இருந்ததை விட தற்பொழுது பல மடங்கு உயர்ந்து ரூ. 22.8 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இதை பார்க்கும் பொழுது தெரிகிறது வரி செலுத்துவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. வரி செலுத்துவோரின் எண்ணிக்கை 65 லட்சத்திலிருந்து தற்பொழுது 1.51 கோடியாக உயர்ந்துள்ளது. இந்த சீர்திருத்தத்தினால் இரண்டு லட்சம் கோடி அளவு மக்கள் பணப்புழக்கத்திற்கு வருவார்கள்.
இதற்கு முன்பாக இருந்த அரசின் வரிவிதிப்புகள் மிகவும் சிக்கலாக இருந்த நிலையில் தற்பொழுது நாடு முழுவதும் ஒரே வரி விதிக்கப்பட்டிருப்பதால் கூட்டாட்சி தத்துவத்திற்கு இந்த ஜிஎஸ்டி கவுன்சில் ஒரு நல்ல எடுத்துக்காட்டாக இருக்கும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.