இந்தியாவில் முதலீட்டை அதிகரிக்கப் போகும் பெப்சிகோ நிறுவனம்! பிரதமர் மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை!
பெப்சிகோ குளோபல் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான ரமோன் லகுவார்ட்டா சமீபத்தில் இந்தியாவிற்கு வந்தபோது அவர் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசி உள்ளார்.அப்போது இந்தியாவில் தன் நிறுவனத்தின் முதலீட்டை அதிகரிக்க போவதாக கூறி தன்னுடைய நிறுவனத்தின் நீண்ட கால நடவடிக்கையை செய்யப் போவதாக கூறியுள்ளார்.
இதைத்தொடர்ந்து பெப்ஸிகோ நிறுவனம் லிங்டுஇன் வலைதளத்தில் பதிவிட்டுள்ள பதிவில், பெப்சிகோவின் தலைமை செயலாளர் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்ததாகவும், தனது நிறுவனத்தின் நீண்ட கால உறுதிபாட்டை குறித்து பேசியதாகவும், உற்பத்தி, புதுமை மற்றும் நிலைத்தன்மை போன்ற பல துறைகளில் இருக்கும் காரணிகள் குறித்து ஆராய்ந்து பேசியதாகவும் கூறப்பட்டது.
லகுவார்ட்டா கடந்த ஏழு ஆண்டுகளாக பெப்சிகோ நிறுவனத்திற்கு தலைமை தாங்கி வந்த நிலையில் தற்பொழுது தான் முதல்முறையாக பிரதமர் மோடியை சந்தித்து உள்ளதாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பில் தலைமைச் செயலாளரான ரமோன் லகுவார்ட்டா மட்டுமல்லாமல் பெப்சிகோ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான ஜக்ருத் கோடேச்சாவும் கலந்து கொண்டுள்ளார்.
பெப்சிக்கோ நிறுவனம் தன்னுடைய வளர்ச்சிக்காக இந்தியாவில் முக்கியமான முதலீடு செய்யப் போவதாக உறுதியளித்துள்ளனர். அதன்படி மத்திய பிரதேசத்தில் இரண்டு புதிய ஆலைகள் முதலீடு செய்யப்படும் என்றும், அசாமில் உணவு ஆலை, மத்திய பிரதேசத்தில் செறிவூட்டப்பட்ட ஆலை எனவும், மதுராவில் புதிய சிற்றுண்டி ஆலை பல முதலீடுகள் செய்யப் போவதாக கூறப்படுகிறது.