என்னது... சர்வதேச விண்வெளி மையத்தை செவ்வாய் கிரகத்தில் அமைக்கப் வாய்ப்புள்ளதா??
இஸ்ரோ நிறுவனத்தின் முன்னால் இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை சர்வதேச விண்வெளி மையத்தை செவ்வாய் கிரகத்தில் அமைப்பதற்கு அதிகம் வாய்ப்பு உள்ளதாக கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து தொடர்ச்சியாக பேசிய மயில்சாமி அண்ணாதுரை தாய்மொழியில் கல்வி கற்றாள் சிறப்பாக கற்க முடியும்.
ஆனால் ஆங்கில மொழியையும் கற்றுக் கொள்வதன் மூலம் உலக அளவில் முன்னேறி பல வாய்ப்புகளை பயன்படுத்தி நல்ல இடத்தை அடைவதற்கு நானே உதாரணம் என தெரிவித்தார்.
தொடர்ச்சியாக இந்திய விண்வெளி துறை சமுதாய நன்மைக்காக பல பணிகளை மேற்கொண்டு வருவதாகவும், சூரிய குடும்பத்தில் பூமியில் மனிதர்கள் வாழ்வது போலவே செவ்வாய் கிரகத்திலும் மனிதர்கள் வாழும் தகுதியுடைய கிரகமாக இருப்பதற்கு வாய்ப்புள்ளது.
அதனால் சர்வதேச விண்வெளி மையத்தில் செவ்வாய் கிரகத்தில் அமைப்பதற்கு அதிக வாய்ப்புள்ளது என்று தெரிவித்தார். பழங்காலம் முதல் தற்பொழுது வரை அறிவியல் உள்ளது. ஆனால் அது தற்பொழுது பல வகைகளில் வளர்ந்துள்ளது.
முக்கியமாக விண்வெளி துறையில் தற்பொழுது இருக்கும் செயற்கை நுண்ணறிவு மிக முக்கியமான இடத்தை பெற்றுள்ளதாகவும், விண்வெளி துறை அடுத்த பரிமாணத்தை நோக்கி வளர்ந்து சென்று கொண்டிருப்பதாக மயில்சாமி அண்ணாதுரை கூறினார்.