தமிழகத்தில் கலைக்கப்பட்ட வக்பு வாரியம்!! விரைவில் புதிதாக அமைக்கப்படும்!! ஐகோர்ட் உத்தரவு!!
வக்பு வாரியம் தற்பொழுது தமிழ்நாட்டில் கலைக்கப்பட்டுள்ளதாகவும் விரைவில் புதிதாக அமைக்கப்படும் என்று உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இதை அடுத்து மதுரையைச் சேர்ந்த அகமது இப்ராஹிம் மதுரை உயர்நீதிமன்றதில் தாக்கல் செய்த மனுவில் வக்பு வாரிய உறுப்பினர்களின் பதவி காலமானது 5 ஆண்டாகும்.
இந்த பதவிக்காலம் நிறைவடைந்த நிலையில் மேலும் மூன்று மாதங்களுக்கு நீடிப்பதாக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை முதன்மைச் செயலாளர் அரசாணை பிறப்பித்தார். இதை எதிர்த்து நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில் வக்பு வாரியத்தில் எந்த நியமனமும் நடைபெறாது என்று மத்திய அரசு தரப்பில் கூறப்பட்டது.
இதைத்தொடர்ந்து இந்தக் கால நீடிப்பில் வாரியத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் தொடரலாம் என்றும், தேர்ந்தெடுக்கப்படாதவர்கள் தொடர முடியாது என்று வக்பு வாரிய சட்டத் திருத்த படி கூறப்பட்டிருந்தது. அதையும் மீறி தேர்ந்தெடுக்கப்படாதவர்கள் வக்பு நடவடிக்கைகளில் தொடர்ந்தால் அது சட்டவிரோதமாகும் என்றும் நீதிமன்றத்தில் உத்தரவிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில் உச்ச நீதிமன்றம் முடிவு வரும் வரை வக்பு வாரிய உறுப்பினர்களுக்கு பதவி நீட்டிப்பு மூன்று மாதங்களுக்கு அளித்து, விரைவில் புதிதாக வக்பு வாரியம் அமைக்கப்படும் என்று கூறப்பட்டது. மேலும் தமிழகத்தில் தற்பொழுது வக்பு வாரியம் செயல்பாட்டில் இல்லை என அரசு தரப்பில் கூறப்பட்டு, சட்டவிரோதம் என்று அழைக்கப்பட்ட மனு செயல்பாட்டில் இல்லை என கோரி மனுவை முடித்து வைத்தனர்.