பாகிஸ்தான் பிரதமர் பேசியதற்கு சரியான பதிலடி கொடுத்த படால் கெலாட்!!

Update: 2025-09-27 07:59 GMT

அரசியல் அறிவியல், சர்வதேச விவகாரம் மற்றும் மொழிபெயர்ப்பு போன்றவற்றில் மிகுதியான அனுபவம் வாய்ந்த படால் கெலாட் கடந்த 2023 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபைக்கான இந்தியாவின் நிரந்தர தூதரகப் பணியில் முதன்மை செயலாளராக பொறுப்பேற்றார். 

ஆனால் அதற்கு முன்பாகவே 2020 மற்றும் 2023ம் ஆண்டில் இந்தியாவின் வெளியுறவு அமைச்சகத்தில் துணைச் செயலாளராகப் பணியாற்றி வந்தார். இந்நிலையில் இவர் தற்பொழுது ஐக்கிய நாடுகள் சபையில் ஆபரேஷன் சிந்தூர் குறித்தும், இரண்டு நாடுகளுக்கு இடையில் உள்ள மோதல் குறித்து பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பின் கூறிய கருத்திற்கு தற்பொழுது சரியான பதிலடி கொடுத்துள்ளார். 

படால் கெலாட் ஐநா சபையில் பேசிய போது பயங்கரவாதத்தை பாகிஸ்தான் ஆதரித்து வருவதாகவும், பாதுகாப்பு வழங்குவதாகவும் உதவி வருகிறது என்று கூறினார். ஆபரேஷன் சிந்தூர் நடந்து கொண்டிருந்த சமயத்தில் பாகிஸ்தான் விமான நிலையங்கள் அனைத்தும் தாக்கப்பட்ட நிலையில் பாகிஸ்தான் தான் இந்தியாவிடம் போரை நிறுத்துவதற்கு எதை மறந்து விட்டு தற்பொழுது வெற்றி பெற்றதாக நினைத்துக் கொண்டுள்ளது. 

பாகிஸ்தான் ஏற்கனவே கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஒசாமா பில்டர்க்கு அடைக்கலம் கொடுத்து வந்தது. இதனால் பாகிஸ்தான் உடனான அனைத்து பிரச்சனைகளுக்கும் இருதரப்பினர் வழியாக தீர்வு காண வேண்டுமே தவிர மூன்றாவது தரப்பினருக்கு இடம் தரக்கூடாது. தேடப்படும் தீவிரவாதிகளை பாகிஸ்தான் ஒப்படைக்க வேண்டும் என்றும், அதன் பிறகு தான் பேச்சு வார்த்தையில் ஈடுபட முடியும் என்று படால் கெலாட் கூறினார். 

Tags:    

Similar News