கோவிலில் செல்லாத பணத்தினால் அலங்காரம் செய்யப்பட்ட விவகாரம்!!

Update: 2025-09-28 11:06 GMT

கும்பகோணத்தில் அமைந்திருக்கும் புகழ்பெற்ற கோவில் தான் பட்டீஸ்வரம் துர்க்கை அம்மன் கோயில். இந்தக் கோவிலுக்கு நாள் தோறும் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் பல இடங்களிலிருந்து வருவது உண்டு. இத்தகைய புகழ்பெற்ற கோவிலில் தேனுபுரீஸ்வரர் மற்றும் துர்க்கை அம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்து வருகின்றனர்.

 இக்கோவிலில் தற்பொழுது நவராத்திரி விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நவராத்திரி விழாவில் துர்க்கை அம்மனுக்கு தினந்தோறும் சிறப்பு அலங்காரம் மற்றும் அபிஷேகம் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த நவராத்திரி விழாவை முன்னிட்டு அம்மனுக்கு மதிப்பிழப்பு செய்யப்பட்ட பணத்தை வைத்து அலங்காரம் செய்யப்பட்டிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. 

இந்த அலங்காரத்தை பார்த்த பக்தர்கள் அம்மனுக்கு மதிப்பிழப்பு செய்யப்பட்ட பழைய 500, 1,000, 2,000 ரூபாய் நோட்டுகளை வைத்து அலங்காரம் செய்து சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. வழக்கமாக இது போன்று பணத்தினால் அலங்காரம் செய்து வழிபடுவது வழக்கம் ஆனால் அவை அனைத்தும் புதிய நோட்டுகளாக இருக்கும். 

ஆனால் மதிப்பிழப்பு செய்த பழைய பணத்தினால் செய்திருப்பதை தொடர்ந்து இந்த பணத்தை கொடுத்தது யார்? அதில் அலங்காரம் செய்வதற்கு அனுமதி செய்தது யார்? பணம் மதிப்பிழப்பு செய்யப்பட்ட நேரத்தில் கோவிலில் இருந்த அனைத்து பணமும் படைக்கப்பட்ட நிலையில் இந்தப் பணம் எப்படி வந்தது என்று கேள்வி எழுப்பினர். 

இந்த அலங்காரத்தில் கிட்டத்தட்ட 15,000 ரூபாய் செல்லாத பணத்தை பயன்படுத்தி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செல்லாத பணத்தை இத்தனை நாள் வைத்திருந்தது குற்றம் என்றும் இந்த பணத்தை கொடுத்தது யார் என லஞ்ச ஒழிப்பு துறை மற்றும் அமலாக்க துறை விசாரணை நடத்த வேண்டும் என கூறினர். நிலையில் கோவில் தரப்பில் இதற்குரிய விளக்கம் உயர் அதிகாரிகளிடம் அளித்து விட்டதாக கூறப்படுகிறது.

Tags:    

Similar News