காஷ்மீரின் ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாதிகளுக்கு ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களை தாரிக் அகமது மீர் என்பவருக்கு தொடர்புடையதாக எழுந்த வழக்கில் விசாரணை நடத்தப்பட்டு வந்தது. இதைத்தொடர்ந்து தாரிக் அகமது மீரின் அசையா சொத்துகளை என்ஐஏ கைப்பற்றியுள்ளது.
ஷோபியன் என்ற மாவட்டத்தில் அமைந்திருக்கும் மால்தேரா என்னும் கிராமத்தில் 780 சதுர அடி நீளத்தில் இருக்கும் கான்கிரீட் வீடு மற்றும் பல தோட்டம் உட்பட தாரிக் அகமது மிருக்கு சொந்தமான சொத்துக்களை முடக்கியுள்ளது.
ஏற்கனவே கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல் தீவிரவாதி சையத் நவீத் முஷ்டாக்கின் கூட்டாளி தாரிக் அகமது மீர் கைது செய்யப்பட்டார்.