இவ்வளவு பெண்கள் கார்ப்பரேட் நிறுவனங்களில் வேலை செய்கிறார்களா?? கணக்கெடுப்பில் தெரிய வந்த உண்மை!!
கார்ப்பரேட் தலைமைத்துவத்தை பொறுத்தவரை தற்பொழுது பெண்களின் எண்ணிக்கை இந்திய அளவில் முதல்முறையாக 20% உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 2016 ஆம் ஆண்டில் கார்ப்பரேட் நிறுவனங்களில் இருக்கும் தலைமை பொறுப்புகளில் வெறும் 13% ஆக இருந்த பெண்களின் எண்ணிக்கையானது 2020-ல் 14%, 2021-ல் 15%, 2022-ல் 17%, 2023-ல் 19%, 2024-ல் 19% என படிப்படியாக உயர்ந்து தலைமை பதவிகளில் பெரும்பாலும் பெண்கள் தங்களுடைய பங்குகளை அளித்து வருகின்றனர்.
இது சமுதாயம் அடுத்த கட்டத்திற்கு செல்வதற்கு வழி வகுப்பதாக தெரிகிறது. தொழில்முறை சார்ந்த துறைகளில் இந்திய பெண்களின் பங்கு 44.6% என அதிகரித்து இருப்பதும், ஐடிஇஎஸ் 41.7%, மருந்துத் துறையில் 25%, எப்எம்சிஜியில் 23%, உற்பத்தியில் 12% என பல துறைகளில் பெண்களின் பங்களிப்பு இருந்து வருகிறது.
இந்த நிலையில் சமீபத்தில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் பெண்களுக்கான சிறந்த நிறுவனங்களாக 125 நிறுவனங்கள் என பெயர் பெற்றுள்ளது. இந்த 125 நிறுவனங்களில் 15% ஐடி சேவை சார்ந்த நிறுவனங்களாக அமைந்துள்ளது.
மீதமுள்ள துறைகளான உலகளாவிய திறன் மையங்கள் மற்றும் உற்பத்தி துறை போன்றவற்றில் 9% என்றும், மருந்து துறை மற்றும் நுகர்வோர் துறை ஆக்கியவற்றில் 5% என்று கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது. இதில் சிறந்த 10 நிறுவனங்களின் அக்சென்ஸர், ஆக்ஸா எக்ஸ்எல் இந்தியா பிசினஸ் சர்வீசஸ் என பல நிறுவனங்கள் இடம் பெற்றுள்ளது.