ஆப்ரேஷன் சிந்தூர் தாக்குதலால் இடம் விட்டு இடம் தாவிய பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பு!!
காஷ்மீர் மற்றும் பஞ்சாபின் எல்லையில் செயல்பட்டு வந்த தீவிரவாத அமைப்பான ஜெய்ஷ்-இ-முகமது, ஹிஸ்புல் முஜாகிதீன் போன்ற குழு ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலுக்கு பிறகு பாகிஸ்தானின் எல்லையில் இருந்து இடத்தை காலி செய்து பாகிஸ்தானின் உள்பகுதிக்கு தங்களுடைய முகாம்களை மாற்றி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த பயங்கரவாத அமைப்பு தற்பொழுது பாகிஸ்தானின் உள்பகுதியில் இருக்கும் லஷ்கர்-இ-தொய்பா என்ற இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. ஏற்கனவே ஆபரேஷன் சிந்தூரில் ஏற்பட்ட தாக்குதலிலிருந்து மீளவும் எதிர்காலத்தில் இந்தியாவால் தாக்குதல் ஏற்படாமல் இருப்பதற்காகவும் ஜெய்ஷ்-இ-முகமது, ஹிஸ்புல் முஜாகிதீன் என்கின்ற பயங்கரவாத அமைப்பு தங்களுடைய இருப்பிடத்தை தற்பொழுது மாற்றி உள்ளது.
தற்பொழுது புதிதாக மாற்றியுள்ள இடமானது ஆப்கானிஸ்தானில் இருந்து சுமார் 47 கிலோ மீட்டர் தொலைவில் திர் என்கின்ற மாவட்டத்தில் மர்கஷ் ஜிகாத்-இ-அக் ஷா என்னும் புதிய மையத்தை லஷ்கர்-இ-தொய்பா அமைத்திருப்பதாக சாட்டிலைட் படங்கள் இந்திய உளவுத்துறை மூலம் தெரிய வந்துள்ளது.