அவசர அவசரமாக டெல்லிக்கு சென்ற ஆதவ் அர்ஜுனா!! முக்கிய தலைவரை சந்திக்கப் போகிறாரா?

Update: 2025-10-02 10:30 GMT

தமிழக அரசியல் கட்சிகளின் வரிசையில் தற்பொழுது தமிழக வெற்றி கழகம் மிகவும் முக்கியமான இடத்தை பெற்றுள்ளது. இந்நிலையில் த.வெ.க-வின் தலைவர் விஜயின் நண்பரான ஆதவ் அர்ஜுனா தொடர்ச்சியாக கட்சி பணியில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் நடந்த கரூர் சம்பவத்தை தொடர்ந்து திடீரென ஆதவ் அர்ஜுனா டெல்லிக்கு சென்றதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் அவ்வளவு அவசரமாக டெல்லிக்கு செல்வதற்கு காரணம் என்ன? என அரசியல் வட்டாரத்தில் கேள்வி எழுந்து வருகிறது.

ஒருபுறம் கரூரில் நடந்த சம்பவத்தின் வழக்கு தொடர்பாக சென்றதாகவும், மறுபக்கம் பாஜக தலைவரை சந்திக்க சென்றுள்ளதாக கூறப்பட்டு வருகிறது. மேலும் வரப்போகும் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை ஒட்டி த.வெ.க தங்களுடைய கூட்டணி குறித்த திட்டங்களை ஆய்வு செய்து வருவதாக கூறப்படுகிறது.

அதைத்தொடர்ந்து மாநில அளவிலான கட்சி தலைவர்களை சந்தித்து ஆலோசிப்பதற்காக ஆதவ் அர்ஜுனா டெல்லிக்கு சென்று இருப்பார் என்று சிலர் கூறி வருகின்றனர். த.வெ.க எந்த கட்சியுடன் சேரும் என்பது தெரியாத நிலையில் இந்தப் பயணம் அரசியல் வட்டாரங்களில் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

ஆனால் ஆதவ் அர்ஜுனாவின் டெல்லி பயணம் குறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வமான அறிவிக்கையும் வெளியாகாத நிலையில் விரைவில் அவர் யாரை சந்திக்க சென்றுள்ளார் என்பதும், தவெகவின் அடுத்தடுத்த அரசியல் திசை குறித்த விவரமும் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Tags:    

Similar News