விரைவில் நடக்கவிருக்கும் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் குடமுழுக்கு!! குடமுழுக்கு பணிகளில் தீவிரமா?

Update: 2025-10-04 14:49 GMT

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் குடமுழுக்கு பணிகள் குறித்து மதுரை தமிழ்நாடு ஹோட்டலில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. அதில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கலந்து கொண்ட நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது அவர் தமிழகத்தில் இருக்கும் 3707 கோவில்களுக்கு கடந்த நான்கு ஆண்டுகளில் குடமுழுக்கு நடைபெற்றுள்ளதாக தெரிவித்தார். அதில் மிகவும் புகழ்பெற்ற கோவில்களான பழனி, திருச்செந்தூர், திருப்பரங்குன்றம் போன்ற முருகன் கோவில்களின் குடமுழுக்கு நடைபெற்ற முடிந்தது குறிப்பிடத்தக்கது.

இதன் வரிசையில் தற்பொழுது மதுரை மீனாட்சி அம்மன் கோவில் குடமுழுக்கு பணிகள் நடைபெற்று வருவதாக கூறினார். அதில் 186 பணிகள் நடைபெற்று வருவதாகவும் அதனுடைய மொத்த மதிப்பு 23 கோடியே 70 லட்சம் ரூபாய் இருக்கும் என்று கூறினார்.

அதில் 117 பணிகள் திருக்கோவிலின் நிதியான 8 கோடியே 90 லட்சம் ரூபாய் செலவில் செய்து வருகின்றனர். மேலும் 69 பணிகள் உபயதாரர் வழங்கிய 14 கோடியே 80 லட்சம் நிதியில் செய்யப்பட்டு வருகிறது. இந்த அனைத்து பணிகளும் வரும் டிசம்பர் மாதத்திற்குள் நிறைவடையும் என்றும், வருகின்ற பிப்ரவரி மாதத்திற்குள் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் குடமுழுக்கு பணிகள் நிறைவு பெறும் என்றும் அதற்கான ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

மேலும் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு உட்பட்ட 18 கோவில்களில் ஒன்பது கோவில்களுக்கு குடமுழுக்கு நிறைவடைந்த நிலையில் மீதமுள்ள கோவில்களுக்கு பிப்ரவரி மாதத்திற்கு குடமுழுக்கு பணிகள் நிறைவு செய்யப்படும் என்று தெரிவித்தார். 

Tags:    

Similar News