நியூயார்க்: கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் ஐடா புயல் !

அமெரிக்காவில் ஐடா சூறாவளியால் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளில் சிக்கி இதுவரை 42 பேர் பலியாகியுள்ளார்.

Update: 2021-09-03 13:51 GMT

அமெரிக்காவின் பல மாகாணங்களை புரட்டிப் போட்டு வரும் ஐடா சூறாவளி, தற்போது நியூயார்க் நகரில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. மேலும் இந்த புயல் காரணமாக 42 பேர் இதுவரை பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு தெற்கு மாகாணமான லூயிசியானாவில் ஐடா சூறாவளி காரணமாக பெய்த கன மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் பல நகரங்களின் வீதிகளில் வெள்ளம் ஓடுகிறது. அமெரிக்காவின் பிரதான நிலப்பகுதியில் கடும் பாதிப்பை ஏற்படுத்திய ஐந்தாவது சக்தி வாய்ந்த சூறாவளியாக ஐடா கருதப்படுகிறது. 


இந்நிலையில், நியூயார்க் நகரின் ப்ரூள்ளின் மற்றும் குயின்ஸ் பகுதியிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. பல இடங்களில் சுரங்கப் பகுதிகளில் மக்கள் சிக்கியிருக்கிறார்கள். அவர்களை மீட்கும் பணிகளை உள்ளூர் நிர்வாகங்கள் சார்பாக தீவிர கவனம் செலுத்தி வருகின்றன. தற்போது நியூயார்க் நகரில் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த நகர மேயர் பில் டி பிளாசியோ, வரலாறு காணாத வானிலையை நியூயார்க் அனுபவித்து வருகிறது.


நியூ ஜெர்சியிலும் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. கன மழை, வெள்ளம் காரணமாக நியூயார்க் நகர சுரங்க ரயில் சேவைகள் அனைத்தும் காலவரையின்றி நிறுத்தப்பட்டுள்ளன.  மேலும் அனைத்து போக்குவரத்து முற்றிலுமாக, தற்போது பாதிக்கப்பட்டுள்ள மக்களின் இயல்பு வாழ்க்கையும் முடங்கி உள்ளது. மேலும் மக்கள் எப்பொழுது இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவார்கள் என்று பெரிதும் எதிர்பார்க்கப்படும் ஒரு சூழ்நிலையில் நியூயார்க் நகர மக்கள் தற்போதும் வாழ்ந்து வருகிறார்கள். 

Input:https://indianexpress.com/article/world/new-york-city-flooding-rains-hurricane-ida-live-updates-7483812/

Image courtesy: indianexpress


Tags:    

Similar News