தடுப்பூசி போட்டால் பரிசா? - நியூயார்க் மேயரின் அதிரடி அறிவிப்பு!

தடுப்பூசி போட்டுக் கொள்வதால் கிடைக்கும் 100 டாலர் பரிசு.

Update: 2021-07-30 13:05 GMT

உலகம் முழுவதும் தற்போது ஆதிக்கத்தை நிலைநாட்டி உள்ள கொரோனா வைரசுக்கு எதிராக பல தடுப்பூசிகளை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். கொரோனா பரவலை கட்டுப்படுத்த மக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று WHO அறிவுறுத்தி வருகின்றனர். இப்பொழுது பெரும்பாலானோர் தடுப்பூசி செலுத்திக்கொள்வதால் தற்போது பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருகிறது. மேலும் தடுப்பூசி எடுத்துக் கொள்பவர்களில் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக, ஒவ்வொரு நாட்டு அரசும் பல்வேறு அறிவிப்புகளை அறிவித்து வருகிறது. 


அந்த வகையில் தற்போது நியூயார்க்கில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்பவர்களுக்கு 100 டாலர் பரிசு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே டெல்டா வகை கொரோனா வைரஸ் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் அதிதீவிரமாக பரவுவதால் மீண்டும் பாதிப்புகள் எண்ணிக்கை அதிகரிக்கிறது. இதனால் அனைவரும் மீண்டும் முகக்கவசம் அணியும்படி, விரைந்து தடுப்பூசி செலுத்திக்கொள்ளவும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வேண்டுகோள் விடுத்தார்.


இந்நிலையில், தடுப்பூசிகள் செலுத்தும் பணிகளை விரைவுப்படுத்தும் நோக்கில், நியூயார்க்கில் வசிப்போருக்கு பரிசு தொகையை நியூயார்க் மேயர் டெபிளாசியோ அறிவித்துள்ளார். தற்போது முதல் செப்டம்பர் 2வது வாரத்திற்குள் தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் நியூயார்க் மக்களுக்கு 100 டாலர் பரிசு கிடைக்கும் என அறிவித்துள்ளார். மேலும், செப்டம்பருக்குள் தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்களுக்கு வாரம்தோறும் பரிசோதனை செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.  

Inputs: https://www.livemint.com/news/world/this-us-city-is-offering-100-dollars-to-get-residents-vaccinated-against-covid-11627519986365.html

Image courtesy: livemint news

Tags:    

Similar News