முஸ்லிம் இளைஞர்களுக்கு ஆயுத பயிற்சி கொடுத்த PFI: செக் வைத்து பிடித்த NIA!
யாருக்கும் தெரியாத வகையில் மறைமுகமாக முஸ்லிம் இளைஞர்களுக்கு ஆயுத பயிற்சி கொடுத்த PFI அதிகாரிகள்.;
இந்தியாவில் தடை செய்யப்பட்ட அமைப்பாக பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா திகழ்கிறது. குறிப்பாக இந்த அமைப்பை சேர்ந்த நிர்வாகிகள் மறைமுகமாக முஸ்லிம் இளைஞர்களுக்கு ஆயுத பயிற்சி மற்றும் பயங்கரவாத கும்பலுக்கு நிதி உதவி போன்ற செயல்களில் ஈடுபட்டதன் காரணமாக 68 நிர்வாகிகள் மீது தற்போது NIA அதிகாரிகள் குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்து இருக்கிறார்கள். கேரளாவை தலைமை இடமாக கொண்டு இயங்கும் PFI என்ற அமைப்பு பல்வேறு மோசடியான செயல்களில் ஈடுபட்டுள்ளது வெளிக்கொணரப்பட்டு வந்து இருக்கிறது.
இவர்கள் சட்டத்திற்கு விரோதமாகும் நாட்டிற்கு எதிராகவும் இருக்கும் பயங்கரவாதிகளுக்கு குறிப்பாக தீவிரவாதிகளுக்கு நிதி உதவி செய்து இருப்பதும், மேலும் இந்தியாவிற்கு எதிராக இளைஞர்களை திசை திருப்பும் முயற்சியில் அவர்களுக்கு கூடுதல் பயிற்சி கொடுக்கவும் முயற்சியிலும் ஈடுபட்டு வந்திருப்பதை தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் கண்டுபிடித்து இருக்கிறார்கள். NIA அதிகாரிகள் பிஎஃப் அலுவலகங்களில் அதிரடியாக சோதனைகளை மேற்கொண்டு பல்வேறு ஆவணங்களையும் கைப்பற்றி இருக்கிறார்கள். அவற்றுக்கு மீதான குற்றப் பத்திரிகை தாக்கல் தற்பொழுது நடைபெற்று இருக்கிறது.
குறிப்பாக பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா அமைப்பை சேர்ந்த 68 நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. முஸ்லிம் இளைஞர்களை மூளை செலவு செய்து சட்டவிரோதமாக அவர்களை நாட்டிற்கு எதிரான செயல்களில் ஈடுபடும் முயற்சிகளை இவர்கள் மறைமுகமாக செய்து வந்ததாகவும் தேசிய புலனாய்வு அமைப்பை சேர்ந்த அதிகாரிகள் தகவல்களை வெளியிட்டு இருக்கிறார்கள். இந்த ஒரு சம்பவம் நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
Input & Image courtesy: Dinamalar