நம்மையே அறியாமல் நம்மை பாதுகாக்கும் உடலின் 9 விசித்திர செயல்கள்.!

நம்மையே அறியாமல் நம்மை பாதுகாக்கும் உடலின் 9 விசித்திர செயல்கள்.!

Update: 2020-07-27 02:03 GMT

நம் உடலின் கட்டமைப்பு, உயிரியில் ரீதியாக நிகழும் மாற்றங்கள், முறைகள் எதையும் முழுமையாக புரிந்து கொள்வது அத்துனை எளிதல்ல. உடலின் பாதுகாப்பு அமைப்பு முறை அதுப்போலத்தான். அது நம்மை எந்த தோய்வுமின்றி 24 மணிநேரம், அனைத்து வார நாட்கள், நம்மை தாக்கக்கூடியாதாக இருக்கும் எதிலிருந்தும் நம்மை அயராது காக்கிற அரண்.

இச்செயல்களை செய்யும் பொழுதெல்லாம் என்றாவது நினைத்திருக்கிறீர்களா நாம் எப்படியெல்லாம் பாதுகாக்க படுகிறோம் என்று... இனி ஒவ்வொறு முறையும் நினைத்து கொள்ளுங்கள்...

கொட்டாவி விடுதல்

எப்போதெல்லாம் மூளை சூடேற்ற படுகிறதோ அல்லது அதீத வேலைப்பளு கொள்கிறதோ அப்போதெல்லாம் அதை தளர்வுப்படுத்தி மிதப்படுத்துவதே இச்செயலின் நோக்கம்.

தும்மல்

நம்முடைய சுவாசப்பாதையில் எப்போதெல்லாம் ஒவ்வாமை ஊக்கிகள், நுண்ணுயிர்கள் தூசு மற்றும் இதர உறுத்தல்கள் ஏற்படுகிறதோ அப்போதெல்லாம் நாம் தும்முகிறோம். இந்த குப்பைகளைகளிலிருந்து நம்மை பாதுகாக்கும் ஆயுதமே இச்செயல்.

நீட்டுதல்

அன்றைய நாளின் உடல்ரீதியான வேலைகளுக்கு நம் உடலை தயார்படுத்த அயத்தமாக நாம் உடலை நீட்டி விரிக்கிறோம். ஆனால் நாம் இப்படி செய்யும் பொழுதெல்லாம் நம் தசைகள் இயங்குகின்றன, இரத்தவோட்டம் புத்துயிர் கொள்கிறது, மேலும் நம்முடைய மனநிலையை மேம்படுத்துகிறது.

விக்கல்

எப்போதெல்லாம் நாம் அவசரகதியில் உணவு உட்கொள்கிறோமோ, பெரிய பெரிய கவளைகளைகளை விழுங்குகிறோமோ அல்லது அதீதமாக உண்கிறோமோ நுரையீரலையும் இரைப்பையையும் சார்ந்த நரம்பு எரிச்சல் அடைகிறது. அதன் விளைவே விக்கல்...

(மெதுவா சாப்புடுங்க.....)

தீடிர் தசைச்சுருக்கம்

இது உண்மையிலே ஒரு விசித்திரமான ஒரு செயல். நாம் அனைவரும் நிச்சயம் இதை விசித்திரமாக கடந்து வந்திருப்போம். ஒரு நொடி நம் உடல் மின்சார ஷாக் தாக்கியது போல அதிர்ந்து அடங்கும். குறிப்பாக உறங்க ஆரம்பிக்கும் தருணங்களில். இச்சமயம் நம் உடலில் உள்ள தசைகள் மிக வலுவாக பிடித்தலுக்குள்ளாகிறது... அப்போது நாம் படுக்கையிலிருந்து கீழே விழுவது போன்றா உணர்வு ஏற்பட்டு நாம் எழுந்து அமர்ந்து கொள்வது வழக்கம்.

நாம் உறங்க எத்தனிக்கும் பொழுது நம்முடைய சுவாசத்தின் அளவு வேகம் வெகுவாக குறையும், நம் நாடி துடிப்பு மெல்ல இறங்கும் பின் நம் தசைகளும் அதே வேகத்தில் தளர்வடையும் . ஆச்சரியமாக இந்த இடத்தில் தான் மூளை இது மரணத்திற்க்கான அறிகுறிகள் என்று தவறாக புரிந்து கொண்டு அதை அறிவிக்கும் விதமாகவும் நம்மை அதிலிருந்து காக்கும் விதமாகவும் நமக்கு அந்த அதிர்வை தருகிறது.

(என்ன ஒரு கடமை உணர்ச்சி....)

தோல் சுருக்கம்

விரல்களில் ஏற்படும் தோல் சுருக்கங்களின் பங்கு அளப்பறியாதது. எப்போதெல்லாம் அதிக அளவிலான ஈரத்தை நம் உடல் சந்திக்கிறதோ அப்போதெல்லாம் இந்நிகழ்வு நடக்கிறது. நம்மை சுற்றியுள்ள சூழ்நிலை வழுக்குவதற்க்கு ஏதுவானதாக உள்ளது என்பதை அது புரிந்து கொள்கிறது. எனவே கைகளில் இந்த சுருக்கத்தை ஏற்படுத்தி மென்மையான பொருட்களை பற்றி தூக்குவதற்க்கு உகந்ததாக தோளின் இறுக்கத்தை கூட்டுகிறது.

(ஓ....இஸ் இட்...?)

நியாபகம் தவறுவது

அதிகமான விரும்பதாகத அனுபவங்கள் நேர்ந்தால் அவ்வப்போது நினைவுகள் தவறும். நம்முடைய மூளை நம் நினைவுகளிலிருந்து மிகுந்த கோரமான தருணங்களை அழித்து விடுகிறது.

புல்லரித்தல்

இச்செயலின் முக்கிய நோக்கமே நம் தோலில் உள்ள துவாரங்களின் வழியாக நம் உடல் சூட்டை இழந்து விட கூடாது என்பதால் அதை குறைக்கும் விதமாக இவ்வாறு நிகழ்கிறது. இதனால் குளிர்ந்த காலநிலைகளிலும் நம்மை கதகதப்பாக வைத்து கொள்ள முடியும்.

கண்ணீர்

வெளிப்புற பொருட்கள் நம் கண்களில் படும் பொழுது நம் கண்களின் சவ்வை பாதுக்ககும் விதமாக கண்ணீர் வந்தாலும். நம்முடைய உணர்வு ரீதியான பாதுகாப்பு அம்சமாக வெளிப்படுவதே கண்ணீர். மிகுந்த அழுத்தம் நிறைந்த சூழ்நிலைகளில் நம் உடல் ஒரு அசாதாரணமான எரிச்சலை உருவாக்குகிறாது. அந்த வலியிலிருந்து நம்மை மீட்பதற்க்காக கண்ணீர் ஒரு பாதுகாப்பு அம்சமாக வெளியேறுவதாக விஞ்ஞானிகள் நம்புகிறார்கள்.

இதெல்லாம் ஒரு நாளில், நம் அன்றாட செயல்களில் நம் ஒவ்வொறு அசைவில் எப்படி நம் உடல் நம்மை பாதுகாக்கிறது, அதற்கு எந்த அளவு நாம் நன்றியுடைவர்களாக இருக்க வேண்டும் எனபதற்க்கான காரணங்கள்.

எனவே உங்களை தளர்வாக வைத்து கொள்ளுங்கள்.....உங்கள் உடல் உங்களுக்கு எல்லாம் ஆகவும் இருக்கும். 

Similar News