அடுத்தது நிபா வைரஸா? உஷாராய் இருக்க தெரிந்துக் கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்!

Nipah virus infection and cause of this virus

Update: 2021-09-06 01:52 GMT

நிபா வைரஸ் என்பது ஒரு புதிய வகை வைரஸ் தொற்று ஆகும், இது விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு வேகமாக பரவுகிறது. இதன் விளைவாக உண்டாகும் நிபா வைரஸ் நோய் மிகவும் தீவிரமானதாக இருக்கிறது. இந்த நோய்க்கான மருந்துகள் இன்னும் கண்டுபிடிக்க படவில்லை. எனினும், ஆராய்ச்சியாளர்கள் இதற்கான மருந்துகள் மற்றும் தடுப்பூசிகளை உருவாக்க கடுமையாக உழைத்து வருகின்றனர். நிபா வைரஸ் முதலில் கம்புங் சுங்கை நிபா, என்னும் மலேசியா நாட்டில் கண்டறியப்பட்டது. இந்த வைரஸ் நிப்ஸ் என்றும் அழைக்கப்படுகிறது. மலேசியாவுக்குப் பிறகு, இந்த வைரஸ் பங்களாதேஷிலும் கண்டறியப்பட்டது. தற்போது, ​​இதன் தாக்கம் இந்தியாவிலும் காணப்படுகின்றது. இந்த வைரஸ் கேரள மாநிலத்தில் அதிகமாக பரவியுள்ளது.


நிபா வைரஸ் பாதிக்கப்பட்ட பன்றிகள் மற்றும் வெளவால்களின் மூலம் பரவுகிறது. பாதிக்கப்பட்ட நபருடன், ஆரோக்கியமான நபர் தொடர்பு கொள்வதினாலும் மனிதர்களிடையில் இந்த வைரஸ் தொற்று பரவுகிறது. இந்த வைரஸ் முதன்முதலில் மலேசியாவில் கண்டறியப்பட்டது, மலேசியாவில் இந்த நோய் பாதிக்கப்பட்ட பன்றிகளின் மூலம் பரவியது. இந்த வைரஸிலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ள, நோயினால் பாதிக்கப்பட்ட பன்றிகள், வௌவால்கள் மற்றும் பாதிக்கப்பட்ட நபர்களுடன் தொடர்பு கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.


 நிபா வைரஸ் தொற்றுக்கான சிகிச்சை இன்னும் கண்டுபிடிக்க படவில்லை. எனினும், அதன் அறிகுறிகளைக் குறைக்க முயற்சிகள் மேற்கொள்ளப் படுகின்றன. வைரஸ் மிக எளிதாக ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவுகிறது. எனவே, மருத்துவமனைகளில் இந்த வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தேவைப்படுகிறது.

Inputs - Login to Health

Tags:    

Similar News