"ஒரு சிஷ்யையின் அஞ்சலி!!" - அருண் ஜெட்லிக்காக நிர்மலா சீதாராமனின் உருக்கமான பிரியாவிடை!

"ஒரு சிஷ்யையின் அஞ்சலி!!" - அருண் ஜெட்லிக்காக நிர்மலா சீதாராமனின் உருக்கமான பிரியாவிடை!

Update: 2019-08-26 10:21 GMT

இந்த கட்டுரை ஆங்கிலத்தில் The Indian Express நாளிதழுக்கு மத்திய நிதித்துறை அமைச்சர் திருமதி.நிர்மலா சீதாராமன் அவர்களால் எழுதப்பட்டது. தமிழ் வாசகர்களுக்காக மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.





வேலையில், அரசியலில் அல்லது வேறு எதிலும், உங்கள் கடந்தகால வெற்றிகளில் நீங்கள் ஓய்வெடுக்க முடியாது என்று எனக்குக் கற்றுக் கொடுத்தவர் அருண் ஜெட்லி.


அவர் தனது நோயுற்ற உடல் நிலையுடன் நீண்ட நாள் தைரியத்துடன் போராடி வந்தார் என்றாலும், அன்று சனிக்கிழமை மதியம் அவர் மரணம் அடைந்தார் என்ற செய்தி தொலைபேசியில் கேட்டதில் இருந்து அந்த பாதிப்பில் இருந்து நான் மீண்டும் எழுவேனா என தோன்றவில்லை. அருண்ஜிக்கும் எனக்கும் இருந்த பொதுவான விஷயங்களைப் பற்றி நான் பிரதிபலிக்கிறேன். எந்தவிதமான உள்நோக்கமும் என்னை எந்த பதில்களுக்கும் இட்டுச் செல்லவில்லை. ஆயினும் கூட, வழிகாட்டுதல் என்பது ஒரு அரசியல் வாழ்க்கையின் தனிச்சிறப்பாக இருந்தால், எனக்கு மிகச் சிறந்ததாக அமைந்தது. வழிகாட்டியைத் தேர்ந்தெடுப்பதில் எனக்கு பங்கு இருந்ததா? என்றால் எதுவுமில்லை என்றே சொல்ல வேண்டும்.


ஆரம்பத்தில், நான் தெற்கில் இருந்து வந்தவள் என்றாலும், சில சமயங்களில் அதன் தொடர்புகளில் இருந்தும், நான் வந்த வடபகுதி அரசியல் கலாச்சார சிந்தனைகளில் இருந்தும் சற்று தள்ளியே இருப்பேன். “நீங்கள் மைலாப்பூரிலிருந்து வந்த ஒரு ‘TamBram(தமிழ் பிராமணரா?)’,  நான் அவருடன் நெருக்கமாகப் பணியாற்றிய சில வருடங்களுக்குப் பிறகும், ஒன்றுக்கு மேற்பட்ட சந்தர்ப்பங்களில் அவர் என்னிடம் அவ்வாறு கேட்டார். இது ஒரு உண்மையான வினவலாக இருந்தது, சில சமயங்களில், நம்முடைய உணர்வுகளில் ஒரே மாதிரியான மாறுபாட்டில் ஒளிமயமான எண்ணங்களுக்கும் அது வழிவகுத்தது.


ஆரம்பத்தில் நான் டெல்லி அரசியல் பழக்க வழக்கங்களில் இருந்து மாறுபட்டு அந்நியமாக இருந்தபோது அவருடன் ஒரு அற்புதமான நல்ல நட்புறவை பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. அவர் ஒரு மிகப்பெரிய வழக்கறிஞர். ஆனால் நான் ஒன்றும் வழக்கறிஞர் கிடையாது. என்றாலும் அவர் கதைகள், சம்பவங்களை சொல்லி தன்னுடைய அனுபவங்களை நம்முடன் பகிர்ந்து சிறந்த வழிகாட்டியாக , அனுபவசாலியாக திகழ்ந்தார்.


2010-ஆம் ஆண்டில் பா.ஜ.க-வின் தேசிய செய்தித் தொடர்பாளராக நான் முதன்முதலில் தலைநகருக்கு வந்த போது டெல்லியின் அரசியல் உலகில் எந்த ஒரு "மிகப்பெரிய "தலைவரையும் நான் அறிந்திருக்கவில்லை என்றாலும் நான் அவரது சிஷ்யை என்பதில் என்பதில் சந்தேகமில்லை.


கட்சியில் எனது ஆரம்ப நாட்களில், நான் தயார் செய்து அவருக்கு அனுப்பிய ஒரு அரசியல் தீர்மானத்தின் பதிப்பை அவர் என்னிடம் திருப்பி அனுப்பினார். கட்சிக்கு ஒரு வரைவுத் தீர்மானம் தேவை என்றும் “ஒரு விரிவான அறிக்கை அல்ல” என்றும் கூறினார். நாங்கள் ஏற்கனவே கட்சியின் மிக சோதனையான காலக் கட்டங்களிலும் இணைந்து நெருக்கமாக பணியாற்றியபோது என்னிடம் இருக்கும் திறமைகள் எவை, ஆற்றல் எவை என்பதை பிரித்தெடுப்பது குறித்து அருண்ஜி நன்கு அறிந்திருந்தார். 


சட்டப் பயிற்சியின் அடிப்படையில், அவர் ஒரு புத்திசாலித்தனமான வேகமான வாசகர், புரிந்துக்கொள்ளும் ஆற்றலில் முழுமையான பிடிப்புடன் இருந்தார். அவர் ஏற்கனவே புரிந்துக்கொண்ட ஒரு விஷயத்தில் நாம் வேலை செய்யும் போது உண்மையில் அவரது பொறுமைக் குணம் மற்றும் அனுசரிப்புத்தன்மையை தெளிவாக புரிந்து கொள்ள முடிந்தது. ஆனால் அருண் ஜி ஒருபோதும் என்னைத் அவசரப்படுத்த மாட்டார் - அல்லது என்னைப் போன்ற வேறு சிலரையும் அந்த வேலை முடியும் வரை குறுக்கிட மாட்டார். 


நாங்கள் சில விஷயங்களில் முரண்பட்டால் கூட அவரின் முரண்பட்ட உணர்வை அவர் எப்போதும் பிரதிபதித்ததில்லை. அவரது சிந்தனை தெளிவு மற்றும் விநியோக முறை மிகவும் தடையின்றி நேர்மையான முறையில் ஒன்றிணைக்கப்பட்டன. இதனால் அவருடைய கருத்துக்கள் எதுவும் நமக்குள் தனிப்பட்ட கருத்து வேறுபாட்டை தராத வகையில் உறுதிப்படுத்தினார். 


ஈகோ குணம் மிகுந்த இந்த தலை நகரத்தில் அருண்ஜி எல்லா உயரங்களையும் கடந்தவராக இருந்தார். தன் மனதில் சரி என்று பட்டதை வெளிப்படையாக நாசூக்காக கூறும் பண்புகளை பெற்ற அவர், பிறர் தவறுகளையும் பொறுத்துக் கொள்ளும், அதே சமயம் அவர்கள் பார்வையில் நின்று பரிசீலிக்கும் குணம் உடையவராக இருந்தார். அவருடைய பலதரப்பட்ட விருப்பங்களையும் நம்மால் வெகு எளிதில் புரிந்துக் கொள்ளுமளவுக்கு அவரது பேச்சுக்கள் வெகு எளிதாக இருக்கும்.  2017-ஆம் ஆண்டில், ரஷ்யாவிற்கு பயணம் செய்த போது, செயிண்ட் பீட்டர்ஸ்பர்க்கில் உள்ள ஸ்டேட் ஹெர்மிடேஜ் மியூசியத்தில் உள்ள சேகரிப்புகளின் புகைப்பட புத்தகத்தை அவருக்காக நான் கொண்டு வந்தேன். அவர் அதன் அட்டையைத் திறந்து பார்ப்பதற்கு முன்பே, பாரிஸ், டோக்கியோ மற்றும் லண்டனில் உள்ள வெளிநாடுகளில் குறைந்தது மூன்று புத்தகக் கடைகளின் பெயர்களைக் கூறி அவை ஒவ்வொன்றைப் பற்றியும் விளக்கத் தொடங்கினார், மேலும் நான் அளித்த பரிசை எங்கிருந்து வாங்கி வந்தேன் என்பதையும் மிகுந்த ஆர்வத்துடன் கேட்டு அறிந்துக் கொண்டார்.


அவர், அவரது ஜூனியர்களுக்கு தனது தாராள மனப்பான்மையைக் காண்பித்த அதே வேளையில், அதில் அவருடைய உள்ளார்ந்த பாதுகாப்பையும் நான் உணர்ந்தது எனக்குள் இன்னும் தெளிவாக நினைவுகள் உள்ளன. நான் ரக்ஷா மந்திராலயத்தில்(பாதுகாப்பு துறை அமைச்சகத்தில்) பொறுப்பேற்ற நாள் அன்று , கம்பீரமான அந்த தெற்கு பிளாக் தாழ்வாரங்கள் வழியாக, அவர் அறைக்குள் நுழைந்ததும் நான் அமர வேண்டிய நாற்காலியை சுட்டிக் காட்டி என்னை அமருமாறு கூறி என்னை அன்போடு நடத்தினார். 


அருண் ஜி என்னை அவரது அரவணைப்பின் கீழ் அழைத்துச் சென்றதன் மூலம் அவர் எந்த பலனைப் பெற்றார் என்று சொல்ல முடியாது. எதுவும் பெறவில்லை, ஆனாலும், அதிக சுமைகள் எதையும் கொடுக்காமல் அவர் எனக்கு வழிகாட்ட நடவடிக்கை எடுப்பார். ஒரு விரைவான தொலைபேசி அழைப்பின் மூலம், அல்லது அவரது முகத்தில் தோன்றும் அறிகுறிகளில் இருந்தே நான் செய்யும் சில விஷயங்களை விட்டு விடுவதையோ, அல்லது மேலும் சிறப்பாக செய்வது குறித்தோ புரிந்துக் கொள்ள முடியும், இது எதிர்மறை சிந்தனைகளில் இருந்து என்னை ஊக்கப்படுத்தவும் செய்யும்.


அவர் நகைச்சுவை மற்றும் மகிழ்ச்சியை வெளிப்படுத்துபவர் என்று நெருங்கிய அனைவருக்கும் தெரியும். ஆனால் அவரின் கேலியோ அல்லது அந்த அவரது ஆர்வமோ ஒருபோதும் யாரையும் காயப்படுத்தவோ அல்லது தீங்கு செய்யவதாகவோ இருந்தது இல்லை. கட்சியினர் அவரைப் பார்க்க வரும் போது, எப்போதும் அவர்களின் நியாயமான நலன்களைப் பாதுகாக்க எதையும் செய்வார்.


தனிப்பட்ட முறையில், அவர் ஒருபோதும் புகழ் விரும்பியாக இருந்ததில்லை. ஆரம்பத்தில் அவர் எதிர்பார்ப்புக்கேற்ற தரத்தில் கட்சி சார்பிலான பத்திரிகை சந்திப்பு மற்றும் நாடாளுமன்றத்துக்கு தேவைப் பட்ட உரைகளை செய்த போது - “ஹ்ம்ம்” மற்றும் இல்லை என்ற ஒரு ஒப்புதலுடன் மட்டுமே இருக்கும். பொதுவாக பணியில் நாம் உற்சாகம் பிற வேண்டி முதுகில் தட்டிக்  கொடுப்பதாகவே இது அமையும். 


இந்த ஊக்கம் போதுமானதாக இருந்தது, குறிப்பாக நினைவில் கொள்ள வேண்டிய மிகப்பெரிய பாடத்தை இது எனக்குத் தந்து வலுப்படுத்தியது: அரசியலில் அல்லது வேறு வேலைகளில் , நம் கடந்தகால வெற்றிகளுடன் நாம் ஓய்வெடுத்துக் கொள்ள முடியாது. எங்கள் கவனத்தில் வைத்துக் கொள்ளத் தேவையானவைகளாக பத்து விஷயங்கள் எப்போதும் இருந்தன. 2011-2012 காலங்களில் தொலைக்காட்சி விவாதங்களில் ஒரு கடினமான நாளுக்கு பிறகு நான் திரும்பி வருகையில், அவரிடமிருந்து எனக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. "நீங்கள் நன்றாக இருக்கிறீர்களா?" என்று அவர் கேட்டார், மறுநாள் வந்து அவரைப் பார்க்கச் சொன்னார். நான் உடனடியாக அடுத்த நாள் அவரை சந்திக்க சென்றேன்.


அப்போது அவர் கூறிய வார்த்தைகள் என் வாழ்நாள் முழுவதும் நினைவில் இருக்கும் "ஒரு விவாதத்தின் மூலம் உங்கள் மாலை பொழுதை வென்று விடலாம் என்று ஒருபோதும் முயற்சிக்காதீர்கள்" என்று அவர் கூறினார். "உண்மைகளை மிக சரியான முறையில் மென்மையாக உங்கள் வாதங்களில் முன் வைத்திடுங்கள், நீங்கள் அந்நாளை வெல்வீர்கள்!" என்றார். அக்காலத்தில் பா.ஜ.க ஆட்சியில் இல்லாத காலம். அருண் ஜி எப்போதும் சத்தமான பிரச்சாரம் மற்றும் கவர்ச்சியான கருத்துக்களை பேசுவதை விட சித்தாந்தத்தை கூறி மக்கள் மனதில் இடம் பிடிப்பதையே சக்தி வாய்ந்ததாகக் கருதினார். அவர் சக்தி வாய்ந்த ஒரு நுணுக்கத்தை வைத்திருந்தார், அந்த நுணுக்கத்தை அவர் மேலும் ஒரு சக்திவாய்ந்த கருவியாக மாற்றினார், மேலும் ஒரு சொற்றொடர் கூறும் விதத்தில் கூறும் போது பிறர் நம்மை நேசிப்பர் என்று நம்பினார். எவ்வளவு பொருத்தமானது! அவரைப் பொறுத்தவரை,  நாம் நமக்கென கடைபிடிக்கும் வழிமுறைகளை ஒரு போதும் சமரசம் செய்யக் கூடாது. அதே போல பொது வாழ்க்கையில் நேர்மைக்கு எதிரான சமரசங்கள் இல்லை என்பதிலும் தெளிவாக இருந்தார். நேர்மையான நபர்களுக்காக அவர் “squeaky-clean” என்ற சொற்றொடரைப் பயன்படுத்துவதை நான் கேட்டிருக்கிறேன். அவர் ஆழமாக பின்பற்றிய ஒரு குணம் அது. 


அருண் ஜெட்லி, என் குரு.. என் வழிகாட்டி.. அவர் என் தார்மீக வலிமை.. ஆனால் அவர் இப்போது இல்லை. நீங்கள் ஆற்றிய பாத்திரத்திற்கு நாங்கள் எப்போதும் நன்றியாய் இருப்போம் அருண் ஜி.


Similar News