ஊழல்வாதிகள் யாரும் தப்ப முடியாது- தெலுங்கானாவில் பிரதமர் அதிரடி!
தெலுங்கானா முன்னாள் முதல் மந்திரி சந்திரசேகர ராவின் மகள் கவிதா ஊழல் வடிக்கில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் ஊழல்வாதிகள் யாரும் தப்ப முடியாது என்று பிரதமர் மோடி உறுதிபட தெரிவித்துள்ளார்.
டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் தெலுங்கானா முன்னாள் முதல் மந்திரி சந்திரசேகர ராவின் மகள் பாரதியா ராஷ்டிர சமிதி எம்.எல்.சியுமான கவிதா நேற்று முன்தினம் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார் .இது தெலுங்கானா மட்டுமின்றி நாடு முழுவதும் பெறும் அதிர்வலைகளை கிளப்பி இருக்கிறது .இந்த வழக்கில் டெல்லி முதல் மந்திரி கெஜ்ரிவாலுக்கும் அமலாக்கத்துறை ஏற்கனவே பலமுறை சம்மன் அனுப்பி இருந்தது .இந்த நிலையில் தெலுங்கானாவில் நாகர்கர்னூல் மாவட்டத்தில் நேற்று நடந்த பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். இதில் பேசும்போது காங்கிரஸ் பாரதிய ராஷ்டிர சமிதி போன்ற கட்சிகளை கடுமையாக சாடினார் இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
காங்கிரஸ், ஊழல் பங்காளிகளாக உள்ளன.குடும்ப அரசியலில் ஈடுபடும் இந்த கட்சிகளால் ஊழல் மலிந்து உள்ளது.காங்கிரஸில் 2ஜி முறைகேட்டில் ஈடுபட்டது. பி.ஆர்.எஸ் கட்சியோ நீர் பாசன திட்டங்களில் ஊழல் செய்தது. இரு கட்சிகளும் நில மோசடியை ஆதரித்து வருகின்றன.பாரதி ராஷ்டிர சமிதி கட்சி தெலுங்கானாவுக்கு சென்று தீவிர ஊழல் கட்சிகளுடன் கூட்டு சேர்ந்துள்ளது. இந்த உண்மைகள் தினம் தோறும் வெளிவருகின்றன. ஊழல்வாதிகள் யாரும் தப்ப முடியாது ஊழல் செய்த யாரும் தப்ப முடியாது என்பதை இன்று தெலுங்கானா மக்களுக்கு உறுதி அளிக்கிறேன்.
ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் தெலுங்கானா மக்களின் ஆதரவு எனக்கு தேவை. நாடு முழுவதும் 25 கோடி மக்கள் வறுமையில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர். தெலுங்கானாவிலும் இதே மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. அரசின் இத்தகைய சாதனைகளால் மத்தியில் மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிக்கு வரும் தேர்தல் அறிவிப்புக்கு முன்னரே தேசிய ஜனநாயக கூட்டணி 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும் என மக்கள் அறிவித்து விட்டனர். இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.
SOURCE :DAILY THANTHI