இந்து கோவில்கள் மீது அரசு கட்டுப்பாடு இல்லை: கர்நாடகா பட்ஜெட்!

"கோவில்கள் மீது அரசின் கட்டுப்பாடு இல்லை" முக்கிய அம்ச அறிவிப்புகளுடன் கர்நாடக பட்ஜெட் தாக்கல்.

Update: 2022-03-04 14:57 GMT

பசு பாதுகாப்பு மற்றும் கோவில்களை அரசின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிப்பது குறித்த கட்சியின் முக்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றும் அதே வேளையில் விவசாயத் துறையில் சில முக்கிய அறிவிப்புகளை சேர்த்து  கர்நாடக அரசு பட்ஜெட் தாக்கல் செய்துள்ளது. அங்கு பெரும் பரப்பை ஏற்படுத்தி வந்த அரசுக் கட்டுப்பாட்டிலிருந்து கோவில்களை முற்றிலும் விடுவிக்கும் பொருட்டு இந்த பட்ஜெட் தாக்கல் அமைந்துள்ளது. கோவில்களுக்கு சுயாட்சி வழங்கப்படும். கோவில்களின் வளர்ச்சிப் பணிகளை தன்னிச்சையாக வழங்க சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


கர்நாடக மாநிலத்தில் உள்ள கோவில்கள் மீதான அரசின் கட்டுப்பாட்டை நீக்குவதற்கு தேவையான சட்ட நடவடிக்கையை தனது அரசு மேற்கொள்ளும் என்று கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை அறிவித்தார். 2021 டிசம்பரில், மாநில அரசின் பிடியில் இருந்து கோவில்களை விடுவிக்க தனது அரசாங்கம் சட்டம் கொண்டு வரும் என்று பொம்மை அறிவித்தார். கர்நாடகாவில் சுமார் 1,80,000 கோயில்கள் உள்ளன. அவற்றில் 35,500 கோயில்கள் மட்டுமே முஸ்ராய் துறையின் கீழ் வருகின்றன. எனவே அனைத்து கோவில்களையும் அரசு கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்கும் என்று கர்நாடக அரசு தற்போது அறிவித்துள்ளது. அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் ஆண்டுதோறும் ரூ.11,000 செலுத்தி கோசாலையில் பசுக்களை தத்தெடுப்பதை ஊக்குவிக்க புண்யகோடி தத்து யோஜனா திட்டத்தை அரசு தொடங்கும்.  


2022-23 பட்ஜெட்டில் கர்நாடக யாத்ரீகர்களின் நலனுக்காக ஆந்திராவில் அமைந்துள்ள புகழ்பெற்ற புனித யாத்திரை மையமான ஸ்ரீஷைலாவில் யாத்ரி நிவாஸ் வளாகம் கட்ட திட்டமிடப் பட்டுள்ளது. ரூ.85 கோடி செலவில் இரண்டு கட்டமாக கட்டுமானப் பணிகள் நடைபெறும் என்று பட்ஜெட் நகலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் கட்ட பணிகளுக்கு, 45 கோடி ரூபாய் ஒதுக்கப்படும். மேலும், மகாராஷ்டிராவில் உள்ள பண்டாரபுரத்திற்கு வரும் கர்நாடகா பக்தர்களுக்கு உதவும் வகையில், விருந்தினர் மாளிகை மேம்படுத்தப்படும் என்றும் கூறப்படுகிறது. 

Input & Image courtesy: News 18

Tags:    

Similar News