சிறுதானிய மாவு வகைகளுக்கு ஜி.எஸ்.டி இல்லை - நிர்மலா சீதாராமன் தகவல்!

சிறுதானிய மாவு வகைகளுக்கு ஜி.எஸ்.டி இல்லை எனவும் பாக்கெட்டில் லேபிள் ஒட்டி விற்கப்பட்டால் 5% வரி விதிக்கப்படும் என்றும் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

Update: 2023-10-08 06:00 GMT

ஜிஎஸ்டி தொடர்பான முக்கிய முடிவுகளை எடுக்கும் ஜிஎஸ்டி கவுன்சிலின் 52வது கூட்டம் நேற்று டெல்லியில் நடந்தது மத்திய நிதி மதுரை நிர்மலா சீதாராமன் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் மாநில நிதி மந்திரிகள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர் இந்த கூட்டத்தில் ஜிஎஸ்டி வரி தொடர்பாக பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன குறிப்பாக சிறுதானிய வகைகளின் பயன்பாட்டை அதிகரிக்க அவற்றின் மீதான வரியை குறைக்க முடிவு செய்யப்பட்டது இது தொடர்பாக நிர்மலா சீதாராமன் பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

மக்களிடையே சிறுதானிய பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.அதன்படி குறைந்த மற்றும் 70% சிறுதானியங்களை உள்ளடக்கிய மாவு வகைகள் உதிரியாக விற்கப்படும் போது அவற்றுக்கு ஜி.எஸ்.டி வரி இல்லை. அதே நேரம் லேபிள் ஒட்டி பாக்கெட்டில் விற்கப்பட்டால் அவற்றுக்கு 5% வரி விதிக்கப்படும். இதே போல வெல்லப்பாகு மீதான ஜி.எஸ்.டி வரி 28 சதவீதத்தில் இருந்து ஐந்து சதவீதமாக குறைக்கப்படுகிறது . இது கரும்பு விவசாயிகளுக்கு பயனளிக்கும்.

அத்துடன் சர்க்கரை ஆலைகள் தங்கள் நிலுவைத் தொகையை விரிவாக வழங்குவதற்கு இது உதவும். கால்நடை தீவன உற்பத்தி செலவை குறைக்கவும் இது வழிவகுக்கும் .இது ஒரு பெரிய வளர்ச்சியாக இருக்கும்.தொழிற்துறை பயன்பாட்டுக்கான கூடுதல் நடுநிலை ஆல்கஹாலுக்கான ஜி.எஸ்.டி 18  சதவீதமாக இருக்கும்.

இந்த கூட்டத்தில் ஜி.எஸ்.டி தீர்ப்பாயத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கான அதிகபட்ச வயது வரம்பு மாற்றி அமைக்க தீர்மானிக்கப்பட்டது. அதன்படி தீர்ப்பாயத்தின் தலைவருக்கான அதிகபட்ச வயது 67 இலிருந்து 70 ஆக உயர்த்தப்பட்டது. இதே போல உறுப்பினர்களுக்கான வயது 65 - லிருந்து 67 ஆகவும் அதிகரிக்கப்பட்டது இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார்.

SOURCE :DAILY THANTHI

Similar News