பிலிப்பைன்ஸ், ரஷ்யா பத்திரிகையாளர்களுக்கு அமைதிக்கான நோபல் பரிசு!
இந்த ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசு பிலிப்பைன்ஸ், ரஷ்யா பத்திரிகையாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசு பிலிப்பைன்ஸ், ரஷ்யா பத்திரிகையாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய ஆண்டுக்கான நோபல் பரிசுகள் பற்றிய அறிவிப்புகள் கடந்த 4ம் தேதி முதல் துறை ரீதியாக அறிவிக்கப்பட்டு வருகின்றது. அதில் மருத்துவம், இயற்பியல் மற்றும் வேதியியல், இலக்கியல் துறைகளுக்கான நோபல் பரிசு வாங்குபவர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், அமைதிக்கான நோபல் பரிசை பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த மரியா ரெஸ்சா மற்றும் ரஷ்யாவை சேர்ந்த டிமிட்ரி முராடோவ் ஆகிய இரண்டு பேருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் பேச்சுரிமைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. பத்திரிகை துறையினருக்கு நோபல் பரிசு வழங்கப்படுவது மற்ற பத்திரிகையாளர்களுக்கு பெருமையை சேர்த்துள்ளது.
Source, Image Courtesy: Dinamalar