இலக்கியத்திற்கான நோபல் பரிசை வென்ற நார்வே எழுத்தாளர்!

நார்வே நாட்டு எழுத்தாளருக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2023-10-06 11:15 GMT

ஸ்வீட் நாட்டின் ஸ்டாக் ஹோம் நகரில் உள்ள ராயல் சுவீடன் அகாடமி ஆண்டுதோறும் நோபல் பரிசுகளை வழங்கி வருகிறது. மருத்துவம், இயற்பியல், வேதியியல் , இலக்கியம் பொருளாதாரம்,  அமைதி ஆகிய துறைகளில் மகத்தான பணியாற்றியவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்படுகிறது . இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு கடந்த இரண்டாம் தேதி முதல் அறிவிக்கப்பட்டு வருகிறது. இதுவரை மருத்துவம் , இயற்பியல் ஆகிய துறைகளுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டன.


இந்நிலையில் நேற்று இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. நார்வே நாட்டைச் சேர்ந்த ஜான் போஸி என்ற எழுத்தாளருக்கு இப்பரிசு வழங்கப்படும் என்று சுவீடன் அகாடமி நிரந்தர செயலாளர் மேட்ஸ் மல்ம் அறிவித்தார். புதுமையான நாடகங்கள் மற்றும் உரைநடைக்காக அவர் நோபல் பரிசுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதாக மேட்ஸ் மல்ம் கூறினார். டிசம்பர் மாதம் நோபல் பரிசு வழங்கும் விழா நடைபெறும். ஒரு மில்லியன் டாலர் பரிசுத்தொகையும் 18 கேரட் தங்கப்பதக்கமும் சான்றிதழும் வழங்கப்படும்.


SOURCE : DAILY THANTHI

Similar News