நவம்பர் 8 முழு சந்திர கிரகணம்: இந்தியாவில் பார்க்க முடியுமா?

வருகின்ற நவம்பர் எட்டாம் தேதி முழு சந்திர கிரகணம் ஏற்படுகிறது இந்தியாவிலும் இதை பார்க்க முடியும்.

Update: 2022-11-01 03:53 GMT

சூரியன், சந்திரன், பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும் பொழுது தான் கிரகணங்கள் நிகழும். சந்திரனின் நிழல் சூரியனை மறைப்பதால் அது சூரிய கிரகணம் ஆகும். பூமியின் நிழல் சந்திரனை மறைப்பதால் அது சந்திர கிரகணம் ஆகும். சந்திரனும், சூரியனும் பூமியில் இருந்து நேர்கோட்டில் எதிரெதிர் பக்கங்களில் இருக்கும் பொழுது முழு சந்திர கிரகணம் நிகழ்கிறது. அந்த வகையில் உலகின் பல்வேறு பகுதிகளில் கடமை 25 ஆம் தேதி சூரிய கிரகணம் நிகழ்ந்தது.


சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் இதை பார்க்க முடிந்தது. வருகின்ற நவம்பர் எட்டாம் தேதி முழு சந்திர கிரகணம் நிகழவுள்ளது. எட்டாம் தேதி நிகழவுள்ள முழு சந்திர கிரகணத்தை கொல்கத்தாவிலும் நாட்டின் பிற பகுதிகளிலும் பார்க்க முடியும். இந்தியாவில் மட்டுமின்றி பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ரஷ்யா என்ற குறிப்பிட்ட பகுதிகளில் இதனை பார்க்க முடியும். இது பற்றி பிரபல வான் இயற்பியல் நிபுணர் அவர்கள் கூறும் பொழுது, சந்திர கிரகணம் எல்லா இடங்களிலும் இருந்தும் தெரியாது. கிரகணத்தின் பகுதி கட்டங்களின் ஆரம்பம் லத்தின் அமெரிக்காவின் சில நாடுகளில் தெரியும் நவம்பர் எட்டாம் தேதி சந்திரனின் பகுதி கிரகணம் மதியம் சுமார் இரண்டு முப்பது மணிக்கு தொடங்கும். 3:46 மணிக்கு முழு சந்திர கிரகண நிலையை அடையும்.


சந்திரனின் இருளை பொருத்தமட்டில் அதிகபட்சம் 4.29 மணி நேரத்தில் இருக்கும் முழு கிரகணம் 5.11 மணிக்கு முடியும். இறுதியாக பகுதி கிரகணம் 6.19 மணிக்கு முடிவடையும். இந்தியாவில் அனைத்து பகுதிகளிலும் சந்திரன் உதிக்கும் நேரத்தில் இருந்து கிரகணம் தெரியும். ஆனால் ஆரம்ப கட்டப் பகுதி மற்றும் முழு கிரகணம் இரண்டுமே தெரியாது. ஏனெனில் இரண்டே நிகழ்வும் இந்தியாவின் எல்லா இடங்களிலும் அடிவானத்தில் கீழே இருக்கும் பொழுது தொடங்கும். சந்திர கிரகணத்தை பார்ப்பதற்கு தொலைநோக்கி போன்ற கருவிகளை பயன்படுத்த தேவையில்லை. வெறும் கண்களாலே பார்க்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Input & Image courtesy: Dinamani News

Tags:    

Similar News