ரூ.6.23 கோடியை திருடிய கன்னியாஸ்திரி! பள்ளிக்கு நன்கொடையாக வந்த பணத்தில் சூதாட்டம் அமோகம்!
nun-arrested-after-stealing-rs-6-crore-from-school-to-gamble
சூதாட்டத்தில் ஈடுபடுவதற்காக பள்ளிக்கு நன்கொடையாக வந்த பணத்தில் இருந்து 8.35 இலட்சம் டாலர்களை திருடிய கன்னியாஸ்திரிக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தை சேர்ந்தவர் 80 வயதான மேரி மார்கரெட் க்ரூப்பர். கன்னியாஸ்திரியான இவர, அங்குள்ள செயின்ட் ஜேம்ஸ் கத்தோலிக்க பள்ளியில் பத்து ஆண்டுகளாக முதல்வராக பணியில் இருந்துள்ளார். அந்த சமயத்தில் சொகுசு வாழ்க்கை வாழவும், சூதாட்டத்திற்காகவும் பள்ளி நிதியில் இருந்து பணம் திருடியதாக ஒப்புக்கொண்டுள்ளார்.
கல்வி மற்றும் தொண்டு செய்வதற்காக வழங்கப்பட்ட நன்கொடை தொகையிலிருந்து 835,000 டாலர் திருடினார். இது இந்திய மதிப்பில் 6 கோடியே 23 லட்சம் ரூபாய் அளவுக்கு சமமாகும். பள்ளிக்கு அனுப்பப்படும் நன்கொடை பணத்தை, தனது ரகசிய வங்கி கணக்கு அனுப்புவது இவருடைய வழக்கம். அதனை தனது ஆடம்பர செலவிற்கு பயன்படுத்தியுள்ளார்.
திருடிய பணத்தை சூதாட்டத்திற்கும், கோடை காலங்களில் ரிசார்ட்டில் தங்குவதற்கும், குளிர்காலத்தில் பனிச்சறுக்கு போன்ற ஆடம்பரமான சொகுசு பயணத்திற்கும் பயன்படுத்தியுள்ளார்.
இந்த வழக்கில் கன்னியாஸ்திரிக்கு 12 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதோடு, சுமார் 8 லட்சம் அமெரிக்க டாலர்களை திரும்ப செலுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.