பணி நிரந்தரம் கோரிய செவிலியர்களை குண்டுக்கட்டாக அப்புறப்படுத்தி வழக்கு பதிந்த தி.மு.க அரசு!
பணி நிரந்தரம் செய்யக்கோரி செவிலியர்கள் போராட்டம் இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு.
தமிழகத்தில் மருத்துவ தேர்வு வாரியம் நடத்திய தேர்வில் தேர்ச்சி பெற்ற செவிலியர்கள் தொகுப்பு ஊதியத்தில் பணியாற்ற வேண்டும் என்றும், மேலும் தொற்று நோய் காலம் முடிந்து பணிநீக்கம் செய்யப்பட்டு 800 செவிலியர்கள் மீண்டும் பணி வழங்க வேண்டும் என்றும் சென்னை ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனை முன்பு நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் போராட்டம் அதிகமான காரணத்திற்காக காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு வந்துள்ளார்கள்.
ஆனால் தங்களை பணி நிரந்தரம் செய்யும் வரை போராட்டத்தை கைவிடமாட்டோம் என்று கோஷங்கள் எழுப்பினர். யாரும் எதிர்பார்க்காத வகையில் மருத்துவமனை முன் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால், அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட போலீசார் 480 செவிலியர்களை அதிரடியாக கைது செய்து உள்ளார்கள்.
இந்த நிலையில் தற்போது மருத்துவமனை முன்பு போராட்டம் நடத்திய செவிலியர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அனுமதியின்றி கூடுதல், அரசு அதிகாரியின் உத்தரவை மீறுதல் உள்ளிட்ட 2 பிரிவுகளில் 487 செவிலியர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
Input & Image courtesy: Asianet News