மஞ்சள் காமாலைக்கு சிறந்த சிகிச்சையளிக்கும் இயற்கை மருந்து!

Nutritional value and side effects of Radish

Update: 2021-09-19 00:15 GMT

முள்ளங்கி பிராசிகா வகை குடும்பத்தின் காய்கறியாகும். இது உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் மக்களால் பரவலாக நுகரப்படுகிறது. முள்ளங்கி, பல்வேறு வகைகளில் காணப்படுகின்றன. சிலர் முள்ளங்கியை பச்சையாக உட்கொள்கின்றனர். எனினும் பல்வேறு வகையான உணவு தயாரிப்புகளில் முள்ளங்கிப் பயன்படுத்தப்படுகிறது.

பெரும்பான்மையான மக்கள், முள்ளங்கியை சாலட்டில் சேர்த்து உட்கொள்கின்றனர். முள்ளங்கி இலைகளும் உடல் ஆரோக்கியத்திற்கு மிகுந்த நன்மை பயக்கிறது. முள்ளங்கி பல்வேறு அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களின் உறைவிடமாகும்.


முள்ளங்கி, பல்வேறு ஊட்டச்சத்துகள் நிறைந்த சத்தான காய்கறியாகும். நாம் அன்றாடம் உட்கொள்ளும் உணவுகளில் முள்ளங்கியை சேர்த்துக் கொள்ளுவதன் மூலம் உடலுக்கு அதிக அளவில் புரதங்களும், நார்ச்சத்துகளும் கிடைக்கின்றன. முள்ளங்கியில் பொட்டாசியம், கால்சியம், இரும்பு, மாங்கனீசு மற்றும் ஃபோலேட் போன்ற பல்வேறு வகையான தாதுக்கள் நல்ல அளவில் உள்ளன. முள்ளங்கியிலுள்ள வைட்டமின் C நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உதவுகிறது.

முள்ளங்கி நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மை பயக்கிறது. ஏனெனில், இது இன்சுலின் உற்பத்தியை அதிகரிக்கும் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கிறது. முள்ளங்கியின் ஊட்டச்சத்து முக்கியத்துவம் காரணமாக, மஞ்சள் காமாலைக்கு சிறந்த சிகிச்சையளிக்க முள்ளங்கி பயனுள்ளதாக அமைகிறது என நிபுணர்கள் கருதுகின்றனர். 


மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் முள்ளங்கி உட்கொள்ள வேண்டும். இது நோயின் அறிகுறிகளைக் குறைக்க உதவுகிறது. மஞ்சள் காமாலை நாள்பட்ட காய்ச்சலால் ஏற்படுகிறது. முள்ளங்கியில் உள்ள வைட்டமின் C தொற்றுநோயைக் குறைக்கிறது. மற்றும் நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது.

முள்ளங்கி பல நன்மைகளைக் கொண்டுள்ளது. எனினும், சில சமயங்களில் இது சில பக்க விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். பால் குடித்தபின் முள்ளங்கியை உட்கொள்ள வேண்டாம். முள்ளங்கியை மீனுடன் சேர்த்து சாப்பிட வேண்டாம். முள்ளங்கியின் அதிகப்படியான நுகர்வு பசியின்மை, தொண்டை புண் மற்றும் தசைப்பிடிப்பை ஏற்படுத்தக்கூடும். கர்ப்பிணி பெண்கள் முள்ளங்கி சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். 

Input & Image courtesy: Logintohealth.

Tags:    

Similar News