ஆக்கிரமிப்பு காஷ்மீர் முழுமையாக இந்தியாவுக்கே சொந்தம் : அதை யாரும் பிரிக்க முடியாது - அமித்ஷா!

ஆக்கிரமிப்பு காஷ்மீர் முழுமையாக இந்தியாவுக்கே சொந்தமானது : அதை யாரும் நம்மிடம் இருந்து பிரிக்க முடியாது என்று அமித்ஷா கூறியுள்ளார்.

Update: 2024-05-11 10:01 GMT

ஆக்கிரமிப்பு காஷ்மீர் முழுமையாக இந்தியாவுக்கு சொந்தமானது. அதை யாரும் நம்மிடம் இருந்து பிரிக்க முடியாது என்று மதிய உள்துறை அமைச்சர் அமித்ரா பேசினார். ஜார்கண்ட் மாநிலத்தில் வெள்ளிக்கிழமை பல்வேறு இடங்களில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட அமித்ஷா பேசியதாவது:-

பாகிஸ்தானிடம் அணு ஆயுதம் இருப்பதால் அந்நாட்டை இந்தியா மதித்து நடக்க வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் மனுஷங்கர் ஐயர் தெரிவித்துள்ளார்.பாகிஸ்தானிடம் அணுகுண்டு இருப்பதால் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் குறித்து பேசக்கூடாது என்று தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பேசியுள்ளார். இங்கு ஒரு உண்மையை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். ஆக்கிரமிப்பு காஷ்மீர் முழுமையாக இந்தியாவுக்கு சொந்தமானது. அதை நம்மிடம் இருந்து யாரும் பிரிக்க முடியாது .

காஷ்மீரின் ஒரு பகுதியாக தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இருந்தது. ஆனால் காங்கிரஸின் மோசமான நிர்வாகத்தால் காஷ்மீரின் ஒரு பகுதியை பாகிஸ்தான் கைப்பற்றியது. பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் அந்நாட்டுக்குச் சென்று ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்டு வர முடியுமா? என்று அமித்ஷா கேள்வி எழுப்பி உள்ளார்.


SOURCE :Dinamani

Similar News