ஒடிசா மதுபான நிறுவன வருமான வரி சோதனை: மக்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட ஒவ்வொரு காசும் மீட்கப்படும்- பிரதமர் மோடி!
ஒடிசா மதுபான நிறுவனத்தில் வருமான வரி துறை நடத்திய சோதனையில் கைப்பற்றப்பட்ட தொகை ரூபாய் 290 கோடியை நெருங்கியது.
ஒடிசா மாநிலத்தில் உள்ள ஒரு பெரிய நாட்டு மதுபான நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் வருமான வரி அதிகாரிகள் கடந்த புதன்கிழமை திடீர் அதிரடி சோதனையை தொடங்கினர். ஒடிசா, ஜார்கண்ட் மற்றும் மேற்கு வங்காள மாநிலங்களில் தொடர்ந்து நாலாவது நாளாக நேற்றும் சோதனை நடைபெற்றது. மொத்தம் 150 அலுவலர்கள் இந்த சோதனையில் ஈடுபட்டனர். வருமானவரி சோதனை நடந்த இடங்களில் ஜார்க்கண்ட் மாநில காங்கிரஸ் கட்சி மாநிலங்களவை எம்.பி ஜெயராஜ் பிரசாத் சாகுவுக்கு சொந்தமான இடமும் அடங்கும்.
இந்த சோதனையில் நேற்று முன்தினம் வரை ரூபாய் 250 கோடி கருப்பு பணம் கட்டு கட்டாக விடுபட்டது. கருத்தை தெரிவித்த பிரதமர் மோடி மக்களிடம் கொள்ளையடிக்கப்பட்ட ஒவ்வொரு காசும் மீட்கப்படும் என கூறியிருந்தார். இந்த நிலையில் நேற்று கணக்கில் வராத பெருந்தொகை கைப்பற்றப்பட்ட நிலையில் பிடிபட்ட மொத்த தொகையின் மதிப்பு ரூபாய் 290 கோடியை நெருங்கியது. பெரும்பாலும் ரூபாய் 500 நோட்டுகளாக இருந்த நிலையில் அவற்றை எண்ணுவதற்கு சுமார் 40 பணம் என்னும் பெரிய சிறிய இயந்திரங்கள் பல்வேறு வங்கி கிளைகளில் இருந்து பெறப்பட்டு பயன்படுத்தப்பட்டன .
ஆனால் இந்த எந்திரங்களை இடைவிடாது பயன்படுத்திக் கொண்டே இருந்ததால் அவற்றில் சிலவற்றில் கோளாறு ஏற்பட்டது. நீண்டு கொண்டே சென்ற பணம் என்னும் பணிக்காக அதிக வருமான வரித்துறை அலுவலர்களும் ,வங்கி ஊழியர்களும் வரவழைக்கப்பட்டனர். எண்ணி முடிக்கப்பட்ட பணக்கட்டுகளை பெரிய பைகளில் வைத்து அரசு வங்கிகளுக்கு கொண்டு செல்ல அதிக வாகனங்களும் தேவைப்பட்டன. நாட்டிலேயே ஒரு சோதனையில் பிடிபட்ட மிக அதிக தொகையாக இந்த ரூபாய் 290 கோடி கருதப்படுகிறது.