118 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோனார் சூரியக் கோவில்: மணலை அகற்ற முடிவு!
பழமை வாய்ந்த கோனார் சூரிய கோவிலில் உள்ள மணல்களை பாதுகாக்க அகற்ற முடிவு.
ஒடிசாவில் அமைந்துள்ள 118 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோனாரக் சூரிய கோயிலில் உள்ள மணல்களை பாதுகாப்பாக அப்புறப்படுத்தும் பணி களை இந்திய தொல்பொருள் ஆராய்ச்சி நிலையம் தொடங்க உள்ளது. மேலும் இது குறித்து விளக்கப்படம் தற்பொழுது தரப்பட்டுள்ளது. ஆனால் இந்த முடிவுகள் நிலையானது என்பது தற்போது வரை உறுதியாகவில்லை. இருந்தாலும் ஆங்கிலேயர்களால் தகர்க்கப்பட்ட இந்த கோவிலைப் பாதுகாக்கும் பொருட்டு அங்குள்ள மணல்களை கட்டாயம் அப்புறப் படுத்தும் பெரிய பொறுப்பு அரசாங்கத்திற்கு உள்ளது.
இதுகுறித்து ASI தலைவர் அருண் மாலிக் கூறுகையில், " இந்த கோவிலில் தடை செய்யப்பட்ட பகுதியில் உள்ள மணல்களை பாதுகாப்பாக அப்புறப்படுத்த பணிகளை தொடங்க வேண்டும். மேலும் இது குறித்த புவனேஸ்வரில் தொடங்கப்பட்ட மூன்று நாள் கருத்தரங்கில் விரிவாக விளக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் நான்கு பேர் கொண்ட குழு இவற்றைப் பற்றி முழுமையாக ஆராய்வதற்கு ASI சார்பில் அமைக்கப்பட்டுள்ளது" என்று அவர் கூறினார்.
மேலும் இந்தக் கோவிலில் உள்ள மணல்களை அகற்றுவதன் மூலம் தரைப்பகுதிக்கு மற்றும் கோவில் கட்டிடத்திற்கும் இடையில், 17 அடி இடைவெளி ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் மற்றும் கட்டுமானத்திற்கு பாதுகாப்பு இன்மை போன்றவை ஏற்படும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த 17 அடி இடைவெளியில் வேறு புதிய மணல்களும் நிரப்பப்பட உள்ளதாக இந்த குழு மேலும் கூறியுள்ளது.
Input & Image courtesy: Indianexpress