பிரதமர் மோடியை பின்தொடரும் அமெரிக்க வெள்ளை மாளிகை - அமெரிக்கர் அல்லாத ஒருவர் இடம்பெறுவது இதுவே வரலாற்றில் முதல்முறை!

பிரதமர் மோடியை பின்தொடரும் அமெரிக்க வெள்ளை மாளிகை - அமெரிக்கர் அல்லாத ஒருவர் இடம்பெறுவது இதுவே வரலாற்றில் முதல்முறை!

Update: 2020-04-10 05:13 GMT

பிரதமர் மோடியின் தலைமை மற்றும் நல்லெண்ணத்தின் அடிப்படையில் வெள்ளை மாளிகை எனப்படும் அமெரிக்காவின் ஜனாதிபதியின் அலுவலகம், இப்போது ட்விட்டரில் ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பிரதமர் அலுவலகம் ஆகியவற்றைப் பின்தொடர்கிறது. 

இவ்வாறு பின்தொடரப்படும் முதல் சர்வதேச தலைவர் பிரதமர் என்பது குறிப்பிடத்தக்கது. வெள்ளை மாளிகை ட்விட்டரில் 19 கணக்குகளை மட்டுமே பின்பற்றுகிறது. அதில் பிரதமர் மோடி மற்றும் ஜனாதிபதி கோவிந்த் தவிர, வேறு எந்த அமெரிக்கரல்லாத தலைவரும் பின்பற்றப்படுவதில்லை.

இதில் சுவாரஸ்யமாக, இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகம் மற்றும் வாஷிங்டனில் உள்ள இந்திய தூதரகத்தின் அதிகாரப்பூர்வ கணக்குளையும் வெள்ளை மாளிகை பின்தொடர்கிறது. 

இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான உறவு எல்லா நேரத்திலும் உயர்ந்தது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். சீன தொற்றுநோயான கொரோனா வைரஸால் மூழ்கியுள்ள அமெரிக்காவிற்கு உதவுவதில் இந்தியா முன்னணியில் உள்ளது.

முன்னதாக கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படும் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகளை வழங்குமாறு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சனிக்கிழமை பிரதமர் நரேந்திர மோடியிடம் கோரிக்கை விடுத்ததை அடுத்து, அமெரிக்காவிற்கு ஹைட்ராக்ஸி குளோரோகுயின் ஏற்றுமதிக்கு இந்தியா அனுமதி அளித்தது.




 



Similar News