ஸ்ரீ ரங்கநாதசுவாமி கோயில்: 10 கோடி மதிப்புள்ள நிலஆக்கிரமிப்பு அம்பலம்!

ஸ்ரீ ரங்கநாதசுவாமி கோயிலுடன் இணைக்கப்பட்ட அறநிலையத் துறையின் காலி இடத்தில் உள்ள ஆக்கிரமிப்பு தடுத்து நிறுத்தப்பட்டது.

Update: 2022-02-16 01:39 GMT

சுமார் ₹ 10 கோடி மதிப்புடைய ஸ்ரீரங்கம், ஸ்ரீ ரங்கநாதசுவாமி கோயிலுடன் இணைக்கப்பட்ட கத்ரி தயாராம் சிவாஜி சமய அறநிலையத்துறையின் காலி இடத்தை ஆக்கிரமிப்பு முயற்சியை அதிகாரிகள் திங்கள்கிழமை தடுத்தனர். தற்போது இருக்கும் காலகட்டங்களில் கோவில் நிலங்களை அபகரிக்கும் கும்பல்கள் பல்வேறு இடங்களில் பெருகி வருகிறார்கள். அதுவும் பல லட்சம் மதிப்புள்ள கோவில் நிலங்களை திட்டமிட்டு ஒரு குழுவாகச் சேர்ந்துகொண்டு கோவில் நிலங்களை அபகரிக்கும் முயற்சியில் பல்வேறு உள்ளூர் மக்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.


அந்த வகையில் தற்போது திருவானைக் கோயில் அருகே 58 சென்ட் இடம் இருப்பதாக கோயில் அதிகாரிகள் தெரிவித்தனர். காலி இடத்தில் இரும்பு குழாய்கள் போட்டு இரவு நேரத்தில் சிலர் ஆக்கிரமிப்பு செய்ய முயற்சித்தனர். ஆக்கிரமிப்பு முயற்சி குறித்த தகவல் கிடைத்ததும், ஸ்ரீரங்கம் கோயில் இணை ஆணையர் எஸ்.மாரிமுத்து, ஊழியர்கள் மற்றும் கோயில் வழக்கறிஞர்களுடன் திங்கள்கிழமை மதியம் சம்பவ இடத்துக்குச் சென்று இடத்தை மீட்டனர். அந்த இடத்தின் மதிப்பு 10 கோடி ரூபாய்.


ஆரம்ப கட்டத்திலேயே ஆக்கிரமிப்பு முயற்சி நடந்ததாக கிடைத்த தகவலின் பேரில், அந்த இடத்தில் போடப்பட்ட குழாய்களை இடித்து அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இப்படிப்பட்ட ஆக்கிரமிப்புகளை செய்யும் மக்கள் இறுதியில் இந்த நிலம் தங்களுக்குத்தான் சொந்தம் என்பது போல் கூறி கோவில் நிலங்களை அபகரிக்க முயற்சிகள் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. 

Input & Image courtesy:The Hindu

Tags:    

Similar News