புதையலை தேடி பழமையான சிவன் கோவிலில் தோண்டிய நபர்கள் - மர்ம நபர்களின் அட்டூழியம்

பழமையான சிவன் கோவிலில் புதையல் இருப்பதாக கூறி தற்போது மிகப் பெரிய பள்ளத்தை ஏற்படுத்தியுள்ளார் மர்மநபர்கள்.

Update: 2022-06-26 01:59 GMT

செஞ்சி அருகே உள்ள மிகவும் பழமையான சிவன் கோயில் கருவறையில் தற்போது மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. இது பற்றி மேலும் விசாரணையில் பல்வேறு தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த பழமையான சிவன் கோவிலுக்கு கர்ப்பகிரகத்தின் கீழ் புதையல் இருப்பதாக ஒரு மர்ம நபர்கள் தற்போது மிகப்பெரிய பள்ளத்தை ஏற்படுத்தி உள்ளார்கள். இந்தக் காலத்தில் தென் இந்தியாவின் மிகப்பெரிய தலைநகரமாக இது இருந்துள்ளது மேலும் சுமார் 9 முதல் 11 ஆம் நூற்றாண்டு வரையிலான பல்லவர்களும் பதினைந்தாம் நூற்றாண்டுகளில் விஜயநகர மன்னர்கள் நாயக்க மன்னர்கள் ஆட்சி செய்து வந்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. 


மேலும் அங்கு செஞ்சிக்கட்டை மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் பல்வேறு வகையான சிவன் கோயில்கள் உள்ளன. இது போன்று உள்ள ஒரு சிவன் கோயில் குறிப்பாக சோமசுந்தரம் கிராமத்தில் வடகால் செல்லும் வழியில் உள்ள சிவன் கோயில் மிகவும் பழமையானது. இந்த கோவில் குறிப்பாக பல்லவர் கால கட்டிடக் கலைகள் காணப்படுகிறது மேலும் படையெடுப்புகள் காரணமாக இந்த கோவில் இடிந்து இருப்பதாகவும் தெரியவருகிறது. இருந்தாலும் சுவாமி சிலைகளை கோவிலுக்கு வெளியில் எடுத்து வைத்து அங்கு பூஜை செய்து வருகிறார்கள். 


மேலும் 3 அடி ஆழம் உள்ள கருவறையில் தற்போது சுவாமி சிலையை அகற்றி வைத்துவிட்டு புதையலை தேடியதாக மர்ம நபர்கள் இத்தகைய செயல்களில் ஈடுபட்டு உள்ளார்கள். ஆனால் ஏற்கனவே பல்வேறு படையெடுப்புகளின் போது இந்த கோவிலின் செல்வங்களை பெரும்பாலானோர் கொள்ளையடிக்கப் பட்டுள்ளது. அதனால் தற்போது அங்கு செல்வங்கள் இருப்பதற்கு வாய்ப்புகள் குறைவு இருந்தாலும் தற்போது இத்தகைய செய்து அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Input & Image courtesy: Dinamalar news

Tags:    

Similar News