சிறப்பான முறையில் நிறைவுபெற்ற டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள்: முன்னிலையில் அமெரிக்கா !

ஆகஸ்டு 23 இல் இருந்து நடைபெற்ற வந்த டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் நேற்று இரவுடன் நிறைவு பெற்றது.

Update: 2021-08-09 13:08 GMT

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த ஜூலை 23ஆம் தேதி தொடங்கி நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகள் நிறைவடைந்தன. குறிப்பாக ஜப்பானில் அதிகரிக்கும் தொற்றுகளுக்கிடையே டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் தற்போது நிறைவு பெற்று இருப்பது மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது என்று சொல்லலாம். கடந்த இரண்டு வாரங்களாக வெவ்வேறு நாடுகளில் இருந்து போட்டியாளர்கள் மிகவும் சிறப்பாகவும் கலந்து கொண்டார்கள். நேற்று இரவுடன் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் நல்லமுறையில் நிறைவுபெற்றது. 


நிறைவு விழா கொண்டாட்டங்கள் 30 நிமிடங்கள் நடந்தன. இந்த ஒலிம்பிக்கில் இந்தியா ஒரு தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளது. இதில் ஆச்சரியம் என்னவென்றால் இறுதி நாளில் 3 தங்க பதக்கங்கள் வென்று சீனாவை பின்னுக்கு தள்ளி பதக்க பட்டியலில் அமெரிக்கா முதலிடம் பிடித்தது. சீனா தான் இந்த வருடம் ஒலிம்பிக் போட்டியில் முதலிடம் பிடிக்கும் என்று மிகவும் பலமாக நம்பப்பட்டது ஆனால் இறுதி நேரத்தில் மூன்று பதக்கங்களை அதிகமாக பெற்று அமெரிக்கா தற்போது முன்னிலையில் இருக்கிறது. 


அமெரிக்கா 39 தங்கப்பதக்கம் உட்பட மொத்தமாக 113 பதக்கங்களை வென்று முதலிடம் பிடித்துள்ளது. இறுதி நாளில் 3 தங்க பதக்கங்கள் வென்று சீனாவை பின்னுக்கு தள்ளி அமெரிக்கா முதலிடம் பிடித்தது. சீனா, ஜப்பான், பிரிட்டன் மாதிரியான நாடுகள் அடுத்தடுத்த இடத்தை பிடித்துள்ளன. இந்தியா இந்த பட்டியலில் 48-வது இடத்தை பிடித்துள்ளது. டாப் 50-ல் இந்தியா இந்த வருட ஒலிம்பிக்கில் இடம் பெற்றிருப்பது பாராட்டத்தக்கது. 

Input: https://sports.ndtv.com/olympics-2020/tokyo-olympics-2020-closing-ceremony-live-updates-online-2505618

Image courtesy: NDTV news


Tags:    

Similar News