'ரெயின்டிராப்ஸ்' அமைப்பின் சார்பில் சென்னையில் 10-ஆம் தேதி நடக்க இருக்கும் சாதனைப் பெண்களுக்கு விருது வழங்கும் விழா!

ரெயின் டிராப்ஸ் அமைப்பின் சார்பில் சென்னையில் பத்தாம் தேதி சாதனைப் பெண்களுக்கான விருது வழங்கும் விழா நடைபெற இருக்கிறது.

Update: 2024-03-01 13:18 GMT

சர்வதேச மகளிர் தினத்தை ஒட்டி ரெயின் ட்ராப் சமூக அமைப்பின் சார்பில் பதினோராவது ஆண்டாக சாதனைப் பெண்களுக்கு விருது வழங்கும் விழா சென்னை அண்ணா சாலையில் உள்ள ராணி சீதை அரங்கில் வருகிற பத்தாம் தேதி நடக்க இருக்கிறது .'ரெயின் டிராப்ஸ்' அமைப்பு இந்த விழாவை நடத்துகிறது .இது குறித்து 'ரெயின் டிராப்ஸ்' சமூக அமைப்பின் நிறுவனத் தலைவர் அரவிந்த் ஜெயபால் கூறியதாவது :-


ஒவ்வொரு துறையிலும் இருக்கும் பெண் சாதனையாளர்களை அடையாளம் கண்டு ஆண்டுதோறும் விருது வழங்கி வருகிறோம். இந்த ஆண்டுக்கான ரெயின் டிராப்ஸ் வாழ்நாள் சாதனையாளர் விருது கர்நாடக இசை கலைஞர் அருணா சாய்ராம் ,இந்திய ராணுவத்தின் முதல் பெண் அதிகாரி பிரியா ஜிங்கன், ஆகியோருக்கு வழங்கப்பட உள்ளது.


சிறந்த ஆளுமைக்கான விருது ஆதித்யா எல். ஒன் பணிக்கு தலைமை தாங்கிய இஸ்ரோ விஞ்ஞானி நிகர் ஷாஜி, வீரத்திற்கான விருது எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் தமிழ் நாட்டுப் பெண் முத்தமிழ் செல்வி ,சிறந்த விளையாட்டு வீராங்கனை காண விருது இந்தியாவின் மூன்றாவது பெண் கிரான் மாஸ்டர் என்ற பெருமையை பெற்றுள்ள வைஷாலி, சிறப்பு அங்கீகார விருது இந்தியாவின் முதல் பெண் வன விலங்கு புகைப்படக் கலைஞர் ராதிகா ராமசாமி, சிறந்த நடிகைக்கான விருது விடுதலை படத்தில் நாயகி நடித்த பவானி ஸ்ரீ  சிறந்த இயற்கை விவசாயிக்கான விருது இயற்கை விவசாயத்தில் பல புதுமைகளை நிகழ்த்தி வரும் அர்ச்சனா ஸ்டாலின், கருணைக்காண விருது மதுரை அரசு பள்ளிக்கு கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள நிலத்தை தானமாக வழங்கிய ஆயி பூரணம், சிறந்த தொழில் முனைவோருக்கான விருது பிரபல யூட்யூப் சேனலின் அம்மா சமையல் மீனாட்சி ஆகியோருக்கு வழங்கப்படுகிறது .


இளம் சாதனையாளருக்கான விருதை ஏராளமான பழ மரங்களையும் பழக்காடுகளையும் உருவாக்கி பசுமையான பூமியை உருவாக்குவது லட்சியமாகக் கொண்டு செயல்படும் பிரசித்தி என்பவர் பெறுகிறார். இளம் நம்பிக்கைக்கான விருதினை இன்ஜினியரிங் படிப்பில் இந்தியாவின் முதல் திருநங்கையாக தேர்ச்சி பெற்ற கிரேஸ் பானு பெறுகிறார்.


SOURCE :DAILY THANTHI

Similar News