துவாரகா அதிவிரைவு சாலை உட்பட நாடு முழுவதும் ஒரு லட்சம் கோடியில் சாலைகள்- மோடி அரசின் சாதனை!
நாடு முழுவதும் ரூபாய் ஒரு லட்சம் கோடி மதிப்பில் ஆன புதிய சாலை திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
நாடு முழுவதும் ஏராளமான சாலை திட்ட பணிகள் முடிக்கப்பட்டு இருந்தன. இதேபோல புதிய சாலை திட்டங்களுக்கான ஏற்பாடுகளும் நடந்து வந்தன. ஒட்டுமொத்தமாக ரூபாய் ஒரு லட்சம் கோடி மதிப்பிலான 114 தேசிய நெடுஞ்சாலை திட்டங்களை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார். அரியானாவின் குருகுராமில் நடந்த இந்த நிகழ்ச்சியில் பணி நிறைவடைந்த சாலைகளை நாட்டுக்கு அர்ப்பணித்தும் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும் அவர் தொடங்கி வைத்தார். இதில் முக்கியமாக எட்டு வழி சாலையான துவாரகா அதிவிரைவு சாலையை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்பணித்தார்.
மொத்தம் 29 கிலோமீட்டர் தொலைவு கொண்ட இந்த சாலை ரூபாய் 9000 கோடியில் அமைக்கப்பட்டுள்ளது. தலைநகர் பிராந்தியத்தின் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் நோக்கில் 60,000 கோடியில் உருவாக்கப்பட்ட நெடுஞ்சாலை மேம்பாட்டு திட்டத்தின் ஒரு பகுதியாக கட்டப்பட்டு இருக்கிறது. இந்த அதிவிரைவு சாலை பணிக்கான அடிக் கல்லை கடந்த 2019 ஆம் ஆண்டு மார்ச் 9ஆம் தேதி அப்போதைய மதிய மந்திரிகள் சுஷ்மா சுவராஜ் அருண் ஜெட்லி மற்றும் நிதின் கட்காரி ஆகியோர் நாட்டினர்.
இந்த சாலையின் 18.9 கிலோமீட்டர் பகுதி அரியானாவிலும் 10.1 km பகுதி டெல்லியிலும் உள்ளது. இதில் அரியானா பகுதி அதிவிரைவு சாலையை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார். இந்த அதிவிரைவு சாலை மூலம் டெல்லி இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையம் மற்றும் குரு கிராம் பைபாஸ் சாலையை நேரடியாக அடையலாம். இதன் மூலம் தலைநகர் பிராந்தியத்தில் போக்குவரத்து நெரிசல் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
SOURCE :DAILY THANTHI