108 திவ்ய பெருமாள் தரிசனம் ஒரே இடத்தில்: ஏப்ரல் 10 வரை பொதுமக்கள் பார்வையிட அனுமதி!
108 திவ்ய பெருமாள் தரிசனம் அனைத்தும் ஒரே இடத்தில் வழிபட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
விஷ்ணு பெருமானின் அனைத்து 108 திவ்ய தேசங்களையும் ஒரே இடத்தில் தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. சென்னையில் கோயம்பேட்டை அடுத்துள்ள வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி கல்யாண மகாலில் 25,000 சதுரஅடி பரப்பளவில் 108 திவ்ய தேச பெருமாள்கள் எழுந்தருளச் செய்யப்பட்டு உள்ளன. முதலில் 108 திவ்ய தேசங்கள் என்ன? என்பதை தெரிந்துகொள்ள வேண்டும். திவ்ய தேசங்கள் என்பது பெருமாளுக்குரிய 108 வைணவத் திருத்தலங்களைக் குறிக்கும். இந்த ஆலயங்களில் பன்னிரு ஆழ்வார்கள் பாடி நாலாயிரம் திவ்ய பிரபந்தங்கள் பாடப்பட்ட சிறப்பு வாய்ந்ததாகும். ஆழ்வார்கள் பாடிய திவ்ய தேசங்களைப் பற்றிய பாடல்கள் மஞ்களாசாசனம் என்றும் அழைக்கப்படுகிறது.
ஆழ்வார்களால் மங்களாசாசனம் பாடப்பெற்ற 108 திருத்தலங்கள் ஒட்டுமொத்தமாக திவ்ய தேசங்கள் என்று கூறப்படுகிறது. இதில் 105 திருத்தலங்கள் இந்தியாவிலும், ஒன்று நேபாளிலும் இருக்கிறது. இந்த அனைத்து 108 திவ்ய தேசங்கள் சென்னையில் கோயம்பேட்டை அடுத்து உள்ள வானகரம் ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி கல்யாண மகாலில் 25 ஆயிரம் சதுரஅடி பரப்பளவில் 108 திவ்ய தேச பெருமாள்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளது.
பக்தா்கள் பார்வையிடுவதற்கான விழா நேற்று நடந்தது. AGA மீடியா நிர்வாக இயக்குனர் ஜி.மோகன் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். மேலும் இது தொடர்பாக கோவில் நிர்வாகிகள் கூறுகையில், "ஒரே இடத்தில் 108 பெருமாள்கள் பெருமாளின் மீது பக்தி கொண்ட ஒவ்வொருவரும் தன் வாழ்நாளில் ஒரு முறையேனும் 108 திவ்ய தேச பெருமாள்களை தரிசித்து மகிழ வேண்டும். அந்த வாய்ப்பு அனைவருக்கும் கிடைக்காது என்பதால், ஒரே இடத்தில் 108 திவ்ய தேச பெருமாள்கள் எழுந்தருள செய்யப்பட்டு உள்ளனர். தொடர்ந்து வருகிற ஏப்ரல் 10ஆம் தேதி வரை பொதுமக்கள் பார்வையிடலாம்" என்றும் அவர்கள் கூறினார்கள்.
Input & Image courtesy: Oneindia News