வெங்காய தட்டுப்பாட்டை போக்க மத்திய அரசு மேற்கொண்ட துரித நடவடிக்கை - துருக்கி, எகிப்திலிருந்து 18000 ஆயிரம் மெட்ரிக் டன் இறக்குமதி!

வெங்காய தட்டுப்பாட்டை போக்க மத்திய அரசு மேற்கொண்ட துரித நடவடிக்கை - துருக்கி, எகிப்திலிருந்து 18000 ஆயிரம் மெட்ரிக் டன் இறக்குமதி!

Update: 2019-12-02 01:38 GMT

வெங்காய தட்டுப்பாட்டை போக்கும் விதமாக துருக்கி மற்றும் எகிப்து இருந்து 18000 ஆயிரம் மெட்ரிக் டன் இறக்குமதி செய்ய மத்திய அரசு முடிவு .


நவம்பர், டிசம்பர் மாதங்களில் ஆண்டுதோறும் வெங்காய தட்டுப்பாடு ஏற்படுவது வழக்கமான ஒன்று, இந்நிலையில் வெங்காயம் அதிகம் உற்பத்தியாகும் மகாராஷ்டிரா ,மத்திய பிரதேசம்,குஜராத், கர்நாடக,உள்ளிட்ட மாநிலங்களில் மழை காரணமாக உற்பத்தி குறைந்ததால் நாடு முழுவதும் வெங்காய தட்டுப்பாடு ஏற்பட்டு, விலை உயர்ந்துள்ளது, வெங்காயத்தின் விலை உயர்வால் மற்றும் தட்டுப்பாட்டால் பொதுமக்கள் மிகவும் கவலை அடைந்துள்ளனர்,தட்டுப்பாட்டை போக்க தீவிர முயற்சியில் இறங்கி உள்ள மத்திய அரசு ,அதற்காக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.


முதல் கட்டமாக எகிப்து நாட்டிலிருந்து 7000 மெட்ரிக் டன் வெங்காயத்தை இறக்குமதி செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அவை டிசம்பர் மாத மத்தியில் இந்தியாவுக்கு வர உள்ளது ,இதனிடையே துருக்கி நாட்டில் இருந்தும் 11 ஆயிரம் மெட்ரிக் டன் வெங்காயத்தை இறக்குமதி செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது இந்த வெங்காயம் டிசம்பர் மாத இறுதி அல்லது ஜனவரி மாத தொடக்கத்தில் இந்தியா வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Similar News