செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்தி அவதூறு பரப்பும் எதிர்க்கட்சிகள்!
பாஜக அரசின் நற்பெயரை கெடுப்பதற்காக தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்தும் எதிர்க்கட்சிகள் குறித்து பிரதமர் மோடி தகவல் வெளியிட்டுள்ளார்.
மகாராஷ்டிரா தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய பிரதமர் மோடி, மத்திய பாஜக அரசை நேரடியாக எதிர் கொள்ள முடியாத எதிர்கட்சிகள் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்தி போலி வீடியோக்களை பரப்புகின்றனர் என்று குற்றம் சாட்டினார். அவர் மேலும் பேசுகையில், 'எனது கருத்துகளையும் அமித்ஷா, ஜே.பி நட்டா போன்ற தலைவர்களின் கருத்துகளையும் திரித்துக்கூற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை எதிர்க்கட்சிகள் பயன்படுத்துகின்றன.
அவர்களால் போலி வீடியோகள் குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருப்பதோடு காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். தலைவர்களின் குரலில் போலி வீடியோக்களை உருவாக்கி சமூக ஊடகங்களில் பரப்புவது ஆபத்தானது.
சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் நோக்கில் அடுத்த ஒரு மாதத்தில் போலி வீடியோக்களை பரப்ப பெரிய அளவில் திட்டமிட்டுள்ளனர். போலி வீடியோக்களில் இருந்து சமூகத்தை பாதுகாப்பது நமது பொறுப்பு .இது போன்ற வீடியோக்களை யாரும் பரப்ப வேண்டாம் .இதன் பின்னணியில் இருப்பவர் மீது தேர்தல் ஆணையம் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றார்.
SOURCE :Dinamani