மோடியின் திறமைக்காக பா.ஜ.கவிற்கு வாக்களித்த எதிர்கட்சி தொண்டர்கள்? பரபரப்பு!கருத்துக்கணிப்பு பீதியில் எதிர் கட்சியினர்!!

மோடியின் திறமைக்காக பா.ஜ.கவிற்கு வாக்களித்த எதிர்கட்சி தொண்டர்கள்? பரபரப்பு!கருத்துக்கணிப்பு பீதியில் எதிர் கட்சியினர்!!

Update: 2019-05-21 13:31 GMT

மக்களவை தேர்தலில் பிரதமர் வேட்பாளராக மோடி முன்னிறுத்தப்பட்டதால், அவருக்கு பாஜக மட்டுமின்றி மற்ற கட்சியின் வாக்காளர்களும் வாக்களித்துள்ளனர்.இந்நிலையில் 'தி இந்து' மற்றும் சிஎஸ்டிஎஸ் லோக்நிதி நிறுவனம் கருத்து கணிப்பில் தெரிய வந்துள்ளது.


மக்களவை தேர்தல் ஏப்ரில்-11 தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடந்து முடிந்துள்ளன.வாக்கு எண்ணிக்கை மே 23-ம் தேதி நடை பெறுகிறது. தேர்தலுக்கு பிந்தைய கருது கணிப்புகள் நேற்று முந்தினம் வெளியாகின. இதில் அதிக இடங்களில் பாஜக கூட்டணி வெற்றி பெரும் என்று பெரும்பாலான கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன.


இந்நிலையில் 'தி இந்து' மற்றும் சிஎஸ்டிஎஸ் லோக்நிதி நிறுவனம் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு நடத்தி வெளியிட்டுள்ளது. பாஜக அரசு மீது அதிருப்தி இருந்தாலும் மோடியின் தலைமை மீது இருந்த ஈர்ப்பு மக்களவை தேர்தலில் அக்கட்சிக்கு பெரும் உதவியாக இருந்ததாக 'தி இந்து' மற்றும் சிஎஸ்டிஎஸ் லோக்நிதி நிறுவனம் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில் தெரிவித்துள்ளது. பிரதமர் பதவிக்கு மோடி முன்னிறுத்தப்பட்டதால் வேறு கட்சிகளை சேர்ந்தவர்களும் கூட பாஜகவிற்கு வாக்களித்துள்ள விவரம் தெரியவந்துள்ளது.


பிரதமர் வேட்பாளராக மோடி இல்லாவிட்டயல் நீங்கள் பாஜகவிற்கு வாக்களிப்பீர்களா, அல்லது வேறு கட்சிக்கு வாக்களிப்பீர்களா, உங்கள் முடிவில் மற்றம் இருக்குமா என தேர்தலில் வாக்களித்துவிட்டு வந்த வாக்காளர்களிடம் கேள்வி எழுப்பினோம் அதற்கு மாறுபட்ட பதில்கள் வந்தன.


பாஜக ஆதரவாளர்கள் மட்டுமன்றி மற்ற கட்சிகளுக்கு வாக்களிப்பவர்கள் கூட மோடிக்காக பாஜகவுக்கு வாக்களித்துள்ளனர். தங்களை பிற கட்சி ஆதரவாளர்களாக வெளிப்படுத்தி கொண்டவர்களும் பாஜகவிற்கு வாக்களித்ததாக தெரிவித்தனர்.


மோடி பிரதம வேட்பாளராக இல்லாவிட்டால் அவர்கள் முடிவு வேறு மாதிரி இருந்திருக்கு என்பதையும் அவர்கள் தெரிவித்தனர். 2014 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலை விடவும் 2019 தேர்தலில் இவர்கள் மோடிக்காக வாக்களித்துள்ளனர்.2014 ஆம் ஆண்டை ஒப்பிடுகையில் இந்த தேர்தலில் மோடிக்காக வாக்களித்தவர்களை பொறுத்தவரையில், பாஜக ஆதரவாளர்கள் 32 சதவீதமாகவும், பாஜக கூட்டணி கட்சிகளின் ஆதரவாளர்கள் 25 சதவீதமாகவும் உயர்ந்துள்ளனர்.


Similar News