பாகிஸ்தான் பணத்தில் வர்த்தகம் செய்ய முடியாது ! - தாலிபான்கள் அதிரடி !
ஆப்கானிஸ்தானில் கடந்த ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி தாலிபான்கள் காபூல் நகரத்தை கைப்பற்றி ஆட்சியை கைப்பற்றினர். இதனையடுத்து அந்த நாட்டு அதிபர் நாட்டைவிட்டு வெளியேறி விட்டார்.
ஆப்கானிஸ்தானில் கடந்த ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி தாலிபான்கள் காபூல் நகரத்தை கைப்பற்றி ஆட்சியை கைப்பற்றினர். இதனையடுத்து அந்த நாட்டு அதிபர் நாட்டைவிட்டு வெளியேறி விட்டார்.
இதனிடையே புதிதாக ஆட்சியில் அமர்ந்த தாலிபான்கள் பெண்களுக்கு எதிராக கடுமையான சட்டங்களை போட்டு வருகின்றனர். அதே நேரத்தில் வர்த்தகம் பற்றியும் சில அறிவிப்புகளை தாலிபான்கள் வெளியிட்டு வருகின்றனர். ஆட்சி அமைத்த தாலிபான்களுக்கு பாகிஸ்தான் அரசு பெரும் ஆதரவைத் தெரிவித்து வருகிறது.
இதனிடையே இரண்டு நாடுகளுக்கு இடையிலான வர்த்தகம் உட்பட அனைத்து பரிமாற்றங்களுக்கும் ஏற்பாடு செய்யவும் பாகிஸ்தான் முடிவு செய்துள்ளது. இதனையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்னர் பாகிஸ்தான் நிதி மற்றும் வருவாய்த்துறை அமைச்சர் ஷவ்கத்தரின் நிதி பற்றி செனட் நிலைக்குழுவிடம் ஆப்கானிஸ்தானுடன் வர்த்தகம் செய்ய தீர்மானிக்கப்பட்டால் பரிமாற்றத்தின்போது பாகிஸ்தான் பணத்தை பயன்படுத்தலாம். இது வெளிநாட்டு பணத்தை சேமிக்கவும், பணத்தை வலுப்படுத்தவும் உதவும் என்றார்.
ஆனால் இதனை மறுத்த தாலிபானை சேர்ந்த அகமதுல்லா வாசிக் பேசும்போது, பாகிஸ்தான் பணத்தில் வர்த்தகம் செய்யப்படும் என்ற கருத்தில் எவ்வித உண்மையும் இல்லை. அண்டை நாடுகளிடையேயான பணபரிவர்த்தனம் ஆப்கானிஸ்தானுடையதாகவே இருக்கும். நாட்டு மக்களின் நலனுக்கு தீங்கு விளைவிக்கின்ற எந்த முடிவும் தாலிபான் அரசு எடுக்காது என்றார்.
இவரது பேச்சை வேறு மாதிரியாகவும் உலக நாடுகள் பார்க்கிறது. பாகிஸ்தானில்தான் அதிகமான கள்ளநோட்டுகள் அச்சடிக்கப்படுகிறது. இதன் காரணமாக கூட தாலிபான்கள் பாகிஸ்தான் நாட்டின் பணத்தை ஏற்க மறுக்கலாம் என்ற பேச்சுகளும் அடிபடுகிறது.
Source: Maalaimalar
Image Courtesy:BBC