போதைப்பொருளுடன் வந்த பாகிஸ்தான் ட்ரோன்: சுட்டு வீழ்த்திய இந்திய பாதுகாப்பு படை!

பாகிஸ்தான் எல்லையில் போதைப்பொருளுடன் பறந்து வந்த சுட்டு வீழ்த்தப்பட்டிருக்கிறது.

Update: 2023-01-24 02:28 GMT

சமீப காலமாக பாகிஸ்தானில் இருந்து பல்வேறு பொது பொருட்கள் மற்றும் ஆயுதங்களுடன் நடமாட்டம் இந்தியாவில் அதிக அளவில் காணப்படுகிறது. மற்றொரு நாட்டிலிருந்து இந்தியாவிற்கு போதை பொருள் கடத்தி வருவது தற்பொழுது அதிகரித்து வருகிறது. குறிப்பாக ட்ரோன்கள் மூலம் இது அதிகமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் தற்பொழுது பாகிஸ்தானில் இருந்து போதைபொருட்களை கடத்தி வந்த ட்ரோன் தற்போது சுட்டு வீழ்த்தப்பட்டிருக்கிறது.


பஞ்சாபில் அமர்நாத் சரஸ் அருகில் உள்ள சர்வதேச எல்லையில் நேற்று இந்திய பாதுகாப்பு படைவீரர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு இருந்தார்கள். அப்பொழுது அங்குள்ள கக்கார் கிராம பகுதிகளில் போதைப் பொருட்களுடன் ட்ரோன் பறந்து வந்தது. வீரர்கள் பார்த்து உடனே சுட்டு வீழ்த்தி இருக்கிறார்கள். உடனடியாக அந்த சுட்டு வீழ்த்தப்பட்டு இருக்கிறது. பின்னர் அதை ஆய்வு செய்த பொழுது சுமார் அதில் 5 கிலோ கிராயின் போதை பொருள் இருப்பது கண்டுபிடிக்கப் பட்டிருக்கிறது.


மேலும் சீனா, அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட பாகங்கள் கொண்ட அந்த ட்ரோன் வடிவமைப்பு கொண்டு இருந்தது. இந்த சம்பவம் தொடர்பாக தற்பொழுது போலீசார் இரண்டு பேரை கைது செய்து இருக்கிறார்கள். சம்பவம் நடந்த பகுதிகளில் இருந்து பாகிஸ்தான் எல்லை சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளதால் இதன் பின்னணியில் பாகிஸ்தான் சதி உள்ளதா? என்பது தொடர்பான விசாரணையும் தற்போது நடைபெற்று வருகிறது.

Input & Image courtesy: Dinamani

Tags:    

Similar News