சிறுபான்மையினர் கோவிலைப் பாதுகாக்க இந்து தலைவர்கள் குழு: பாகிஸ்தான் நியமனம்!

பாகிஸ்தானில் உள்ள சிறுபான்மையினர் கோவில்களை பாதுகாக்க இந்து தலைவர்கள் கொண்ட குழுவை பாகிஸ்தான் நியமித்துள்ளது.

Update: 2021-12-31 00:30 GMT

முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள நாட்டில் சிறுபான்மை சமூகத்தினரின் கோவில்களை பராமரிப்பதற்காக முதன்முறையாக இந்து தலைவர்களின் குழுவை அமைத்துள்ளதாக பாகிஸ்தான் டிசம்பர் 29 அன்று அறிவித்தது. மேலும் அங்கு வாழும் சிறுபான்மை இந்துக்களுக்கு வரவேற்கும் ஒரு அறிவிப்பாக அமைந்து உள்ளது. மேலும் இந்த குழுவின் தலைவராக இந்து தலைவரை நியமிப்பது இதுவே முதல் முறையாகும். பாகிஸ்தானை பெரும்பாலும் சிறுபான்மையினருக்கான இந்து கோவில்கள் பெருமளவு சேதங்களுக்கு உள்ளாகி வருகின்றன. அவற்றை தடுக்கும் பொருட்டு இந்த குழு நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  


மத விவகார அமைச்சகம் ஏற்கனவே செயல்பட்டு வரும் பாகிஸ்தானில் சீக்கிய குருத்வாரா நிர்வாகக் குழு ஏற்கனவே செயல்பட்டு வருகின்றது. அதே மாதிரி தற்போது பாகிஸ்தான் இந்து மந்திர் நிர்வாகக் குழுவை அமைத்தது. இது முற்றிலும் சிறுபான்மை இந்துக்களின் கோவில்களை நிர்வகிக்கும் மற்றும் பாதுகாக்கும் என்றும் கூறியுள்ளது. இந்து சமூகத்தின் கோரிக்கையின் பேரில் ஒரு குழுவை அமைத்து பாகிஸ்தான் சரித்திரம் படைத்துள்ளது என்று குழு தலைவர் திரு. கிருஷ்ணா சர்மா கூறினார். பாகிஸ்தானின் முஸ்லீம் அல்லாத மக்களின் பிரச்சனைகள் முன்னுரிமை அடிப்படையில் தீர்க்கப்பட்டு வருவதாகவும், பாகிஸ்தான் இந்து சமூகத்தின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு குழு அமைப்பது கருவியாக இருக்கும் என்றும் அவர் மேலும் கூறினார்.


"மத மற்றும் கலாச்சார வேறுபாடுகள் இருந்தபோதிலும், சகிப்புத்தன்மை மற்றும் ஒருவரையொருவர் ஏற்றுக்கொள்வது மனிதநேயம் என்று கூறிய அமைச்சர், தீய சக்திகள் பாகிஸ்தானில் மதம், பிரிவு மற்றும் மொழியியல் அடிப்படையில் மோதலை விரும்புகின்றன என்று கூறினார். புதிய குழு முஸ்லிம் அல்லாத மக்களுக்கும் மாநிலத்திற்கும் இடையே பாலமாக செயல்படும்" என்று அவர் கூறினார். மேலும் இந்த குழுவில் திவான் சந்த் சாவ்லா, ஹாரூன் சரப் தயாள், மோகன்தாஸ், நரஞ்சன் குமார், மேகா அரோரா, அமித் ஷதானி, அசோக் குமார், வெர்சி மில் தெவானி, அமர்நாத் ரந்தாவா ஆகியோர் அடங்கிய குழு கிருஷ்ணா சர்மா தலைமையில் செயல்படும் என்றும் கூறப்படுகிறது. 

Input & Image courtesy: The Hindu



Tags:    

Similar News