பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் துப்பாக்கி சூட்டில் படுகாயம் - பின்னணி காரணம் என்ன?
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் துப்பாக்கி சூட்டில் படுகாயம் அடைந்து இருக்கிறார் இந்நிலையில் இதன் பின்னணியில் யார் இருக்கிறார்.
பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான். பாகிஸ்தான் அரசியல் கட்சியை தொடக்கி 2018 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் வென்று, ஆட்சியைப் பிடித்தார். ஆனால் விளையாட்டு களம் போல அரசியல் களம் அவருக்கு தொடர்ந்து வெற்றிகரமாக அமைந்துவிடவில்லை. அவருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஓரினில் திரண்டு நாடாளுமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்து கடந்த ஏப்ரல் மாதம் 10ஆம் தேதி அவரது பிரதமர் பதவியை பறித்து விட்டன. அதனைத் தொடர்ந்து இம்ரான் கான் தற்பொழுது பிரதமராக இருக்க செரிப் அரசுக்கு எதிராக போர் கொடி உயர்த்தியும், தேர்தல் நடத்த வலியுறுத்தியும் பாகிஸ்தானில் பேரணி பொதுக்கூட்டங்களில் கலந்து வருகிறார்.
அந்த வகையில் அவர் நேற்று பஞ்சாப் மாகாணம் வாஜிராபாத் நகரில் பேரணியில் கலந்து கொண்டு பேசினார். அப்பொழுது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தன் வைத்திருந்த கை துப்பாக்கி எடுத்து இப்ராஹீமை நோக்கி சரமாரியாக சுட்டார். அதில் ஒரு குண்டு இம்ரான் கால் வலது காலில் பாய்ந்தது. இதனால் அவர் படுகாயம் அடைந்தார்.
மேலும் ஆறு பேருக்கு துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்து இருக்கிறார்கள். இதன் பின்னணியில் யார் இருக்கிறார்? என்பது தொடர்பான தற்போது விசாரணை பாகிஸ்தானில் நடைபெற்று வருகிறது. துப்பாக்கியால் சுட்ட நபர் இது பற்றி கூறுகையில், இம்ரான் கான் நாட்டை தவறாக வழி நடத்துகிறார். அது என்னால் பார்த்துக் கொண்டிருக்க முடியவில்லை. எனவே அவரை கொல்ல வேண்டும் என்று சுட்டேன் என்று கூறுகிறார்.
Input & Image courtesy: Dinamalar News