பாகிஸ்தானில் அடக்கி ஒடுக்கப்பட்ட இந்து பெண் பட்டதாரி: மோடி அரசு சட்டப்படி குடியுரிமை பெற்று பஞ்சாயத் தலைவர் ஆகிறார்!

பாகிஸ்தானில் அடக்கி ஒடுக்கப்பட்ட இந்து பெண் பட்டதாரி: மோடி அரசு சட்டப்படி குடியுரிமை பெற்று பஞ்சாயத் தலைவர் ஆகிறார்!

Update: 2020-01-17 08:16 GMT

ராஜஸ்தானின் டோங்க் மாவட்டத்தில் நேற்று கிராம பஞ்சாயத்து தலைவருக்கான தேர்தல் நடைபெற்றது. இங்கு கிராம ஊராட்சி தலைவி பதவிக்கு போட்டியிடும் நீதா சோத்தா, பாகிஸ்தானை சேர்ந்த இந்து பெண். 18 ஆண்டுகளுக்கு முன் ஒரு இந்தியரை திருமணம் செய்து கொண்டு இராஜஸ்தான் மாநில கிராமத்திற்கு மருமகளான வந்தவர்.


இங்கு வந்து படித்தார். பட்டம் பெற்றார், ஆனாலும் இந்திய பிரஜைக்கான வாய்ப்பு இல்லாததால் இங்கும் முன்னேற முடியாமல், அங்கும் செல்ல முடியாமல் தவித்தார்.


இந்த நிலையில்தான் மோடி தலைமையிலான பாஜக அரசு கடும் எதிர்ப்புக்கிடையில்  நிறைவேற்றி சட்டமாக்கிய இந்திய குடியுரிமை திருத்த சட்டம் மூலம் தனக்கும், தன குடும்பத்தாருக்கும் இந்திய பிரஜை என்ற அந்தஸ்து கிடைத்ததாக கூறினார். இதற்காக தான் 18 ஆண்டுகள் போராடியதாகக் கூறினார்.


இந்த தேர்தலில் தான் வெல்வது உறுதி என்றும், பாகிஸ்தானில் மத ரீதியாக கொடுமைப்படுத்தப்பட்டு போராடும் பல என் சொந்தங்களை திரும்ப வைக்க மோடி அரசு கொண்டு வந்த இந்த சட்டம் உதவும் என்றும் கூறினார். தனது மாமனார் ஏற்கனவே இந்த கிராமப் பஞ்சாயத்தின் தலைவராக 3 முறை இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


SOURCE:- OPINDIA


Similar News