ஒரே ஒரு இந்துக் கோவிலுக்கு வழங்கிய நிலத்தையும் ரத்து செய்த பாகிஸ்தான்- புதிய திருப்பங்கள் !

பாகிஸ்தானில் இந்துக்கள் பெரிய சிறுபான்மை சமூகமாக உள்ளனர். அதிகாரப்பூர்வ மதிப்பீட்டின்படி, பாகிஸ்தானில் 75 லட்சம் இந்துக்கள் வசிக்கின்றனர், பெரும்பாலும் சிந்து மாகாணத்தில் உள்ளனர்.

Update: 2021-11-09 12:45 GMT

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் ஒரே ஒரு இந்து கோவிலுக்கு நிலம் ஒதுக்கப்பட்டதில் பல்வேறு சர்ச்சைகள் கடந்த சில வருடங்களாக நடந்து வருகிறது. இஸ்லாமாபாத்தின் செக்டார் எச்-9/2ல் கோவில் கட்ட நிலம் ஒதுக்கப்பட்டது.

பாகிஸ்தானில் உள்ள CDA இஸ்லாமாபாத்தில் ஒரு இந்து கோவில் கட்டுவதற்கான இட ஒதுக்கீட்டை  ரத்து செய்ததாக எக்ஸ்பிரஸ் ட்ரிப்யூன் செய்தி வெளியிட்டுள்ளது. இதற்காக பெரும் விமர்சனங்களை எதிர்கொண்டதால், தலைநகர் மேம்பாட்டு ஆணையம் (CDA) தனது உத்தரவை திரும்பப் பெற்றது. 

தலைநகரின் பசுமையான பகுதிகளில் புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கு மத்திய அமைச்சரவை தடை விதித்ததையடுத்து நில ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதாக CDA வின் வழக்கறிஞர் ஜாவேத் இக்பால் இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை தெரிவித்தார்.

எவ்வாறாயினும், பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்களை எதிர்கொண்ட சில மணிநேரங்களில் இந்த முடிவை திரும்பப் பெற்றுக்கொண்டது.

மத விவகார அமைச்சகம், சிறப்புப் பிரிவு மற்றும் இஸ்லாமாபாத் நிர்வாகத்துடன் கலந்தாலோசித்த பிறகு, 2016 ஆம் ஆண்டு நிலம் ஒதுக்கீடு செய்வதற்கான செயல்முறை தொடங்கியது என்று கடந்த ஆண்டு ஜூலை மாதம், CDA இன் நகர்ப்புற திட்டமிடல் இயக்குனர் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

"கோயில், சமுதாயக்கூடம் மற்றும் ஷாம்ஷன் காட் (தகன மைதானம்) கட்டுவதற்காக இந்து சமூகத்திற்கு இடம் ஒதுக்கப்பட்டது. 2017ல் 3.89 கானல் பகுதி ஒதுக்கப்பட்டு, 2018ல் இந்து பஞ்சாயத்து வசம் ஒப்படைக்கப்பட்டது," என்று அவர் கூறினார்.

மனித உரிமைகள் ஆணையத்தின் (HRC) உறுப்பினர் கிரிஷன் ஷர்மாவின் கூற்றுப்படி, இஸ்லாமாபாத்திலும் அதன் புறநகரிலும் கிட்டத்தட்ட 3,000 இந்துக் குடும்பங்கள் வாழ்கின்றன.

பாகிஸ்தானில் இந்துக்கள் பெரிய சிறுபான்மை சமூகமாக உள்ளனர். அதிகாரப்பூர்வ மதிப்பீட்டின்படி, பாகிஸ்தானில் 75 லட்சம் இந்துக்கள் வசிக்கின்றனர், பெரும்பாலும் சிந்து மாகாணத்தில் உள்ளனர்.

பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (PoK) சிறுபான்மையினர் மற்றும் இஸ்லாம் அல்லாத மதத்தினர் மீதான தாக்குதல்கள் குறித்து இந்தியா பல சந்தர்ப்பங்களில் கவலை தெரிவித்தது. கடந்த ஆண்டு, பாகிஸ்தானில் சிந்துவில் உள்ள மாதா ராணி பத்தியானி மந்திர், குருத்வாரா ஸ்ரீ ஜனம் ஸ்தான், கைபர் பக்துன்க்வாவில் உள்ள காரக்கில் உள்ள இந்துக் கோயில் உள்ளிட்ட பல கோயில்கள் தாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.  


Cover Image Courtesy: Curly டாப்லெஸ் 

Tags:    

Similar News