குர்ஆன் பிரதிகளை இழிவுபடுத்திய குற்றம்: பயங்கர முறையில் கொல்லப்பட்ட இளைஞர்!
பாகிஸ்தானில் குரானை இழிவுபடுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுக்காக பயங்கரமாக கொல்லப்பட்ட அப்பாவி இளைஞர்.
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள தொலைதூர கிராமத்தில் மதப் புத்தகத்தை இழிவுபடுத்தியதாகக் கூறி நடுத்தர வயது நபர் ஒரு கும்பலால் அடித்துக் கொல்லப்பட்டதாக நேரில் பார்த்தவர்கள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர். இச்சம்பவம் சனிக்கிழமையன்று ஜங்கிள் தேரா கிராமத்தில் நடந்துள்ளது. அங்கு ஒரு நபர் புனித குர்ஆனின் பக்கங்களைக் கிழித்து தீ வைத்ததாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, உள்ளூர் மக்கள் தங்கள் மாலை தொழுகைக்குப் பிறகு கூடினர். நேரில் கண்ட சாட்சிகளின் கூற்றுப்படி, சம்பவம் நடைபெறுவதற்கு முன்பு போலீசார் கிராமத்திற்கு வந்தனர்.
ஆனால் கும்பல் பாதிக்கப்பட்டவரை SHO-யின் காவலில் இருந்து பிடித்து மரத்தில் கட்டி வைத்தது, அதன் பிறகு அவர் அடித்துக் கொல்லப்பட்டார். மேலும் பயங்கரமான கும்பல் அந்த இளைஞன் கொடூர முறையில் அடித்தே கொன்று உள்ளது குறிப்பிடத்தக்கது. பாதிக்கப்பட்டவர் குற்றமற்றவர் என்று கூறியதாக கூறப்படுகிறது. ஆனால் கோபமான கும்பல் அவரது வேண்டுகோளை புறக்கணித்தது. பஞ்சாப் முதல்வர் உஸ்மான் புஸ்தார், இந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணைக்கு காவல்துறையிடம் அறிக்கை கோரியுள்ளார். பொதுவாக பாகிஸ்தானில் மரண தண்டனை உட்பட இஸ்லாத்தை இழிவுபடுத்துவதற்கு எதிராக மிகவும் கடுமையான சட்டங்கள் உள்ளன.
மேலும் முஸ்லிம் பெரும்பான்மை உள்ள நாடுகளில் நடக்கும் குற்றங்களுக்கு அங்குள்ள மக்களை தண்டனை அளிக்கும் பல்வேறு சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இதற்கு முன்பு கூட பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் மத நிந்தனை குற்றச்சாட்டின் பேரில் தொழிற்சாலை மீது தாக்குதல் நடத்திய கடும்போக்கு இஸ்லாமியக் கட்சியின் ஆத்திரமடைந்த ஆதரவாளர்களால் ஆடைத் தொழிற்சாலையின் இலங்கை நிர்வாகி ஒருவரை அடித்துக் கொல்லப்பட்டு அவரது உடலை எரித்து இரண்டு மாதங்களுக்கு முன்பு இந்த கொடூரமான சம்பவம் நடந்துள்ளது.
Input & Image courtesy: Swarajya