இந்துக்கள் எதிர்ப்பால் அடிபணிந்த பாகிஸ்தான்: கோயிலுக்கு நிலம் ஒதுக்கி ஆணை!

இந்து கோயிலுக்கு ஒதுக்கியிருந்த நிலத்தை பாகிஸ்தான் அரசு ரத்து செய்திருந்த நிலையில் இந்துக்களிடம் இருந்து கடும் எதிர்ப்புகள் வந்ததை தொடர்ந்து மீண்டும் நிலம் ஒதுக்கி ஆணையிட்டுள்ளது.

Update: 2021-11-10 04:28 GMT

இந்து கோயிலுக்கு ஒதுக்கியிருந்த நிலத்தை பாகிஸ்தான் அரசு ரத்து செய்திருந்த நிலையில் இந்துக்களிடம் இருந்து கடும் எதிர்ப்புகள் வந்ததை தொடர்ந்து மீண்டும் நிலம் ஒதுக்கி ஆணையிட்டுள்ளது. நமது இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் முதன் முறையாக இந்து கோயில் கட்டுவதற்கு முடிவு செய்யப்பட்டது. இதற்காக கடந்த 2016ம் ஆண்டு நிலம் ஒதுக்கப்பட்டது. அந்த இடத்தில் கோயில் மற்றும் சமுதாய கூடம் ஆகியவை கட்டுவதற்கு பாகிஸ்தான் அரசு அனுமதி வழங்கியிருந்தது.

இதனிடையே கடந்த ஆண்டு நடைபெற்ற பாகிஸ்தான் அமைச்சரவைக் குழு கூட்டத்தில் அரசு ஒதுக்கிய நிலங்களில் கட்டுமானங்கள் எதுவும் நடைபெறாமல் இருந்ததால் அதற்கு அளிக்கப்பட்ட உத்தரவு ரத்து செய்யப்பட்டது. இதனால் இந்துக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு சமூக வலைதளம் மூலமாக இந்துக்கள் கண்டனங்களை தெரிவித்தனர். பல இடங்களில் ஆர்ப்பாட்டமும் நடத்தியிருந்தனர். 


இந்நிலையில், பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் நகர வளர்ச்சி ஆணையத்தின் செய்தி தொடர்பாளரான சையத் ஆசிப் ராசா கூறும்போது: அரசு ஒதுக்கியிருந்த நிலங்களில் கட்டுமான பணிகள் நடைபெறாமல் இருந்ததால் நலத்தை மீண்டும் அரசு எடுத்துக்கொண்டது. ஆனால் இஸ்லாபாத் இந்து கோயிலுக்கு இது பொருந்தாது. இதனை பரிசீலனை செய்யாமல் கோயிலுக்கு வழங்கப்பட்ட ஆணையை அதிகாரிகள் ரத்து செய்துவிட்டனர். எனவே மீண்டும் அந்த நிலத்தில் கோயில் கட்டுவதற்கான ஆணையை பாகிஸ்தான் அரசு அளிக்கும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Source, Image Courtesy: Dinamalar


Tags:    

Similar News