சொந்த கட்சியினரே இம்ரான்கான் ஆட்சியை கலைக்க ரெடி: 28ம் தேதி நம்பிக்கையில்லா தீர்மானம்!
பாகிஸ்தான் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. இதனால் பிரதமர் இம்ரான்கானுக்கு எதிர்க்கட்சியில் மட்டுமின்றி சொந்தக் கட்சியிலும் எதிர்ப்புகள் எழுந்துள்ளது. விரைவில் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கும் எதிர்க்கட்சி, ஆளும் கட்சி எம்.பி.க்கள் ஆயுத்தம் ஆகியுள்ளனர்.
பாகிஸ்தான் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் 100 பேர் கடந்த 8ம் தேதி நாடாளுமன்றத்தில் பிரதமர் இம்ரானுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொடுத்திருப்பது அந்நாட்டு அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரதமராக இம்ரான்கான் பொறுப்பேற்றதில் இருந்து பொருளாதாரம் மந்தமான நிலையிலேயே உள்ளது. வெளிநாடுகளில் கடன்களை பெற்று தற்போது மிகப்பெரிய நெருக்கடி நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இனிமேலும் இம்ரான்கானை பதவியில் விட்டுவைக்கக் கூடாது என்று எதிர்க்கட்சிகள் மற்றும் ஆளும் கட்சி இணைந்து வருகின்ற 28ம் தேதி நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்துகிறது. இதனால் ஆட்சி எப்போது வேண்டுமானாலும் கலையலாம் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. மொத்தம் 336 எம்.பி.க்கள் கொண்ட பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் தற்போது எதிர்க்கட்சிகளுக்கு சுமார் 160 எம்.பி.க்களின் ஆதரவு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
Source: Maalaimalar
Image Courtesy: DNA India